செய்திகள் :

Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு, தானாகச் சரியாகிவிடுமா? தாய்ப்பால் வழியே சர்க்கரை பரவுமா?

post image

Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன. இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் என்கிறார்கள். அது உண்மையா, குழந்தை பிறந்தால் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். 

கர்ப்பகால நீரிழிவு என்பது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால், அது பிற்காலத்தில் நீரிழிவாக மாறாமல் இருக்க, இப்போதிலிருந்தே கவனமாக இருக்கவும்.

நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.

நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சக்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது, தாய்ப்பால் குடிப்பதால் குழந்தையின் குளுக்கோஸ் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக அந்தக் குழந்தைக்கு இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கத் தொடங்கும்.

தாய்ப்பால் (breastfeed)
தாய்ப்பால் (breastfeed)

குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது குழந்தை பிறந்து வெளியே வந்ததும் அதற்கு  ரத்தச் சர்க்கரை அளவானது குறையத் தொடங்கும். எனவே, குழந்தை பிறந்ததும் தாய்க்கு நீரிழிவு இருந்தாலும் அடிக்கடி அதற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது அவசியம். இதன் மூலம் குழந்தைக்கு ஹைப்போகிளைசிமியா எனப்படும் தாழ சர்க்கரை நிலை ஏற்படுவது தவிர்க்கப்படும். 

எனவே, நீரிழிவு உள்ள அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு நீரிழிவு வந்துவிடும் என பயப்படத் தேவையில்லை. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதற்கான அலாரமாக இதை எடுத்துக் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

சைனஸ் முதல் மைக்ரேன் வரை; மரு.சிவராமன் சொல்லும் தீர்வுகள்!

’’உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் கு.சிவராமன், சைனஸ் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: விருந்துக்குப் பிறகு பீடா சாப்பிடும் வழக்கம், செரிமானத்துக்கு நல்லதா?

Doctor Vikatan: என் கணவருக்கு அடிக்கடி பீடா சாப்பிடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சாப்பிடும்போது அங்கே விற்கப்படும் ஸ்வீட் பீடாவை தவறாமல் வாங்கிச் சாப்பிடுகிறார். “பீடா வேண்டாம், வெற்றிலை–... மேலும் பார்க்க

Doctor Vikatan: பதின்ம வயதுப் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி உடல் எடையைக் கூட்டுமா?

Doctor Vikatan: பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக டீன்ஏஜில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களிகொடுப்பது மிகவும் நல்லது என்று நிறைய தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இயற்கை மருத்துவர்களும், ஊட்டச்ச... மேலும் பார்க்க

உணவுக்குப் பிறகு பாதித்த உடல்நிலை - பிரமோஸ் ஏவுகணை திட்ட பொறியாளர் 30 வயதில் திடீர் மரணம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பொறியாளர் ஆகாஷ்தீப் குப்தா மரணமடைந்துள்ளார்.30 வயதான ஆகாஷ்தீப் குப்தா,... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர்நைட் ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் காம்போ - ஆரோக்கியமான காலை உணவா?

Doctor Vikatan: நான்தினமும் இரவில் ஆர்கானிக் ஓட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில்ஊறவைத்துவிட்டு, மறுநாளுக்கு காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன். காலையில் அத்துடன் சிறிது தேனும் கல... மேலும் பார்க்க

Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!

பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைப் பற்றி பேசுவதற்கு பெண்கள் கூச்சப்படுவதாலும், இன்று மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண... மேலும் பார்க்க