செய்திகள் :

Doctor Vikatan: புளிப்பு நெல்லிக்காய், துவர்ப்பு நெல்லிக்காய்... இரண்டில் எது பெஸ்ட்?

post image

Doctor Vikatan: புளிப்புச் சுவையுள்ள குட்டி நெல்லிக்காய், துவர்ப்புச் சுவையுள்ள பெரிய நெல்லிக்காய் என இரண்டு கிடைக்கிறது. இவற்றில் எது அதிக ஆரோக்கியமானது... எதை, எப்படிப் பயன்படுத்தலாம்... ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை நெல்லிக்காய் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

புளிப்பான சிறிய நெல்லிக்காய், துவர்ப்பான பெரிய நெல்லிக்காய் என எதுவாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடியது அது என்றே சொல்லலாம். 'ஊட்டச்சத்துகளின் பவர் ஹவுஸ்' என்றும் நெல்லிக்காயைச் சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் அபரிமிதமான சத்துகள் நிறைந்துள்ளன.

உப்பும் காரமும் தூவி விற்கப்படும் புளிப்பு நெல்லிக்காயை வாங்கி ருசித்த அனுபவம் பள்ளிக்காலத்தில் அனேகம் பேருக்கு இருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் வைட்டமின் சி சத்து மிக அதிகம். நெல்லிக்காய் என்றாலே ஊறுகாய்தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதை பழைய சாதத்தில் ஊறவைத்துச் சாப்பிடலாம். மோரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய்க்கு சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக மாற்றும் தன்மை உண்டு. பாலிபினால், புரதம், நார்ச்சத்து, கால்சியம் என எல்லாம் கொண்டது நெல்லிக்காய். வைட்டமின் சியானது நோய் எதிர்ப்பாற்றலுக்கு உதவி, பார்வையையும் கூர்மையாக்கும்.

இயற்கை மருத்துவத்தில் கூந்தல் எண்ணெய் தயாரிப்பில் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவற்றைச் சேர்த்துக் காய்ச்சுவார்கள். அது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும்.

இயற்கை மருத்துவத்தில் கூந்தல்  எண்ணெய் தயாரிப்பில் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவற்றைச் சேர்த்துக் காய்ச்சுவார்கள். அது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும். பொடுகுப் பிரச்னை நீங்கும். இரும்புச்சத்து உடலில் உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு வைட்டமின் சி சத்தும் அவசியம். அந்த வகையில் இரும்புச்சத்துள்ள உணவுகளோடு நெல்லிக்காயையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். உடலின் சூட்டைத் தணிப்பதிலும் நெல்லிக்காய் சிறப்பானது.

நெல்லிக்காய் நல்லது என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.  கலோரியும் இனிப்பும் குறைவு என்பதால், தினமும் ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டாலே போதுமான சத்துகள் நமக்குக் கிடைத்துவிடும். குழந்தைகளுக்கு தினமும் நெல்லிக்காய் கொடுப்பதன் மூலம் அவர்களது நினைவாற்றல் மேம்படும். கவனம் கூடும். இதயநோய், சர்க்கரைநோய் பாதிப்புகளைக் குறைக்கும். நெல்லிக்காயுடன் சிறிது இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தினமும் காலையில் குடிப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து, எந்தத் தொற்றும் நம்மைத் தாக்காமல் பாதுகாக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் அது கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமம் இளமையாக, தொய்வின்றி இருக்க உதவும்.

நம் சருமத்தின் இளமையைத் தக்கவைப்பதில் கொலாஜென் மிக முக்கியம். கொலாஜென் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம்.  நெல்லிக்காயில் அதிக அளவு  வைட்டமின் சி உள்ளதால் அது கொலாஜென் உற்பத்தியைத் தூண்டி, சருமம் இளமையாக, தொய்வின்றி இருக்க உதவும். சருமத்தில் சுருக்கங்கள் வருவது தவிர்க்கப்படும்.  செரிமானம் சீராவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். நெல்லிக்காயானது நம் கல்லீரலைக் காக்கும் கவசம் போன்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 மில்லி பெரிய நெல்லிக்காய் சாறும், 10 மில்லி பாகற்காய் சாறும் கலந்து அதில் சிறிது இஞ்சிச்சாறும் சேர்த்து தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு சேர்த்துக் குடித்து வந்தால், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கும் நல்லது. உணவில் புளிக்கு பதில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காயை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

GERD எனப்படும் Gastroesophageal reflux disease பிரச்னை உள்ளவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் உணவு மேலேழும்பி வரும் அவதி இருக்கும். அவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமாகலாம். அவர்கள் நெல்லிக்காயைத் தவிர்க்கலாம்.

GERD எனப்படும் Gastroesophageal reflux disease பிரச்னை உள்ளவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் உணவு மேலேழும்பி வரும் அவதி இருக்கும். அவர்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமாகலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பதால் இன்சுலின் எடுத்துக்கொண்டு, கூடவே நெல்லிக்காயையும் அதிகம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை மிகவும் குறையவும் வாய்ப்பு உண்டு. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சர்க்கரையைக் குறைக்கும் என்பதால் சிலர், மற்ற மருந்துகளை நிறுத்திவிட்டு, வெறும் நெல்லிக்காயை மட்டுமே எடுத்துக்கொள்வதையும் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ஆலோசனைப்படி, கூடுதல் பலனுக்காக நெல்லிக்காயையும் எடுத்துக்கொள்ளலாம்.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் அவர்களது பிரச்னை மேலும் தீவிரமாகலாம். எனவே, அவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு நெல்லிக்காய் சாற்றில் தண்ணீர் கலந்து நீர்க்கச் செய்து எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் ஒருநாளைக்கு ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``காந்தி திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்'' -ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்... மேலும் பார்க்க

இந்தியாவில் பஞ்சத்தை போக்க அரும்பாடுபட்டவர்... பசுமைப் புரட்சி பகலவன் சி.சுப்பிரமணியம்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர், உணவு மற்றும் விவசாய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அன்றைய காலகட்டத்தில் நிலவிய பஞ்சத்தையும் பசியையும் நீக்க, பசுமைப் புரட்சியை முனைப்புடன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan:சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் ... மேலும் பார்க்க

Grapes: செல்களின் வீக்கத்தைத் தடுக்கும்; புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திராட்சை!

''உலகின் எல்லா நாகரிக வரலாற்றிலும் இடம்பெற்ற பழம், திராட்சை. எந்தப் பருவத்திலும் கிடைக்கக்கூடிய பழம். வைட்டமின், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. கறுப்பு, பச்சை என இரண்டு வகைகள் இருந்தாலும்... மேலும் பார்க்க

கொடி கம்பம் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பா? அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள் | Decode

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் வைத்திருக்கும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோவில் அலசப்பட்டிருக்கிறது மேலும் பார்க்க