செய்திகள் :

Doctor Vikatan: வைட்டமின் மாத்திரைகளை இப்படி எடுத்தால்தான் பலன் கிடைக்குமா..?

post image

Doctor Vikatan: எந்தெந்த வைட்டமின்களை எப்படிச் சாப்பிட வேண்டும்... உதாரணத்துக்கு, இரும்புச்சத்துக்கான சப்ளிமென்ட் சாப்பிட்டால், கூடவே வைட்டமின் சியும் சேர்த்து எடுக்க வேண்டும் என்கிறார்களே... தனியே எடுத்தால் பலன் இருக்காதா, உணவுக்கும் இது பொருந்துமா, இதைத் தெளிவுபடுத்த முடியுமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

உங்களுக்கு அனீமியா எனப்படும் ரத்தச்சோகை இருந்தால்,  அதற்காக இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது, கூடவே, வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்து எடுக்கும்போது இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.  

உதாரணத்துக்கு, நீங்கள் பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவற்றைச் சாப்பிடும்போது, கூடவே ஆரஞ்சு ஜூஸ்,  எலுமிச்சைப்பழ ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கும்போது இரும்புச்சத்து நன்றாக உட்கிரகிக்கப்படும். கீரை சாப்பிடுகிறீர்கள் என்றால், அத்துடன் வைட்டமின் சி சத்துள்ள உணவைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். எலுமிச்சைப்பழ சாதம், கீரை மாதிரியான காம்போவில் எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டியும் கால்சியமும் சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை.  இந்த இரண்டும் இரட்டைப் பிறவிகள் போல... வைட்டமின் டி சத்தானது முட்டை, செறிவூட்டப்பட்ட உணவுகளில் (fortified foods)  அதிகம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொரு வைட்டமின் சப்ளிமென்ட்டையும் எதனுடன் சேர்த்து எடுக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆராய வேண்டாம். 

உங்களுக்கு ஏதேனும் சத்துக்குறைபாடு இருந்து, அதற்காக மருத்துவரையோ, ஊட்டச்சத்து ஆலோசகரையோ பார்த்தீர்கள் என்றால், அவரே உங்களுக்கு எந்த வைட்டமினை எப்படிச் சாப்பிட வேண்டும், அதனுடன் சேர்த்து எடுக்க வேண்டிய உணவுகள் என்ன என்று விளக்கிவிடுவார். 

நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தேவைக்காக நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துடன், இரும்புச்சத்தும் சேர்த்துக் கிடைக்க கீரைகள், காய்கறிகள் எடுக்க வேண்டும்.

மற்றபடி பேலன்ஸ்டு உணவுதான் எப்போதும் எல்லோருக்குமான பொதுவான அறிவுரை. அந்த வகையில் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் என தினமும் ஏதோ ஒரு கார்போஹைட்ரேட் உணவு எடுக்க வேண்டும். அடுத்தது புரோட்டீன். இதற்காக சிக்கன், முட்டை, பருப்பு, ராஜ்மா, கொண்டைக்கடலை, பனீர், பால், தயிர், மோர் போன்றவற்றை எடுக்கலாம்.  நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தேவைக்காக நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துடன், இரும்புச்சத்தும், தாதுச்சத்துகளும் சேர்த்துக் கிடைக்க கீரைகள், காய்கறிகள் எடுக்க வேண்டும்.  கொழுப்புச்சத்தும் உடலுக்கு அவசியம் என்பதால் சிறிதளவு எண்ணெய், நெய் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படி எல்லாம் கலந்ததுதான் பேலன்ஸ்டு டயட்.  இதைத் தவிர்த்து தனித்தனியே வைட்டமின்கள், மினரல்கள்,எதனுடன் எது என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

ரயில் நிலையத்தில் இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்... வைரலாகும் வீடியோ

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பலகைகளில் ஹிந... மேலும் பார்க்க

குறையும் MP-க்கள்? Amit shah ஆக்‌ஷன்! Stalin வார்னிங்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'டார்கெட் 200' என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி ம... மேலும் பார்க்க

TVK Vijay: கோலாகலமாக தொடங்கிய தவெக-வின் இரண்டாம் ஆண்டு! - மகிழ்ச்சியில் தொண்டர்கள்! - Photo Album

TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆ... மேலும் பார்க்க

ஜி.கே.மணி இல்ல திருமண விழா தமிழக முதல்வர் முதல் நடிகர் விஜய் மகன் வரை பங்கேற்ற பிரபலங்கள்..!

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏவின் மைத்துனர் தன்ராஜ்- சாரதா ஆகியோரின் மகன் டாக்டர் சேது நாயக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி என்பவர்களின் மகள் டாக்டர் விமலாம்... மேலும் பார்க்க

UP-க்கு Plus TN -க்கு MINUS - BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... ஏன்?* “மக்கள் தொகையைக் கட்டுப்படு... மேலும் பார்க்க