செய்திகள் :

Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா?

post image

Doctor Vikatan:  நான் ஐடி வேலையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக சரியான தூக்கம் இல்லை. மக்னீசியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா.... யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா... உணவின் மூலம் மக்னீசியம் பெற என்ன வழி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இண்டர்னெல் மெடிசின் சிறப்பு மருத்துவரான ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தூக்கத்தை வரவழைப்பதில் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் ஓரளவு உதவும். மார்க்கெட்டில் பலவிதமான மக்னீசியம் சப்ளிமென்ட்டுகள் கிடைக்கின்றன. இருந்தாலும், உங்கள் தூக்கப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதைச் சரிசெய்ய நினைப்பதுதான் சரியான வழியே தவிர, எதையுமே யோசிக்காமல் நேரடியாக சப்ளிமென்ட் உபயோகிக்க நினைப்பது சரியல்ல.

நீங்கள் தினமும் சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்கிறீர்களா, தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கேட்ஜெட்ஸை ஆஃப் செய்கிறீர்களா, தூக்கத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற விஷயங்களை முதலில் செக் செய்யுங்கள். தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு, மூளையை அமைதிப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சருமப் பராமரிப்பு, இசை கேட்பது என எதை வேண்டுமானாலும் செய்யலாம். 

வேலை பார்த்து முடித்த அடுத்த நிமிடமே தூங்கிவிட வேண்டும் என நினைக்கக்கூடாது. செயற்கை வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பதால், சூரியன் அஸ்தமனம் ஆனதும் மூளைக்குத் தெரிய வாய்ப்பில்லை.  தவிர, கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தூங்கச் செல்கிற நேரமானது மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 10- 15 நிமிடங்கள் வேறுபடலாம், மற்றபடி அதிக வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்ளவும். இவற்றை எல்லாம் சரிசெய்யாமல், சப்ளிமென்ட்ஸ் எடுப்பதில் பலனிருக்காது.

கேட்ஜெட்ஸ் உபயோகித்திருக்கும் பட்சத்தில் அவற்றின் ப்ளூ லைட்ஸின் தாக்கத்தால் மூளையில் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டிருக்கும்.

தூக்கத்துக்கான சப்ளிமென்ட்டுகளில் மெலட்டோனின் மிக முக்கியமானது. அது சர்கேடியன் ரிதம் எனப்படும் நம்முடைய  உடல் கடிகாரத்தைக்கூட முறைப்படுத்தி, தூங்குவதற்கு உதவும். தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்னீசியம் சப்ளிமென்ட்டும் உதவும். சரிவிகித உணவுகள் சாப்பிட்டாலே மக்னீசியம் உடலில் சேரும்.  நட்ஸ், சீட்ஸ், முழுத்தானியங்கள் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது.  உங்களுக்கு எப்படிப்பட்ட சப்ளிமென்ட் சரியானது என்பதை மருத்துவ ஆலோசனை கேட்டுப் பின்பற்றலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?

பாம்பு கடித்து மனிதர்கள் இறந்த செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில தினங்களாக மனிதனைக் கடித்தப் பாம்பு இறந்த செய்தி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாம்புக்கடிசச்சின் நாக்பூரேமத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: BP மாத்திரைகள்; ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால் ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா?

Doctor Vikatan: ஒருமுறை ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா... என் ரத்த அழுத்தம் குறைந்தாலும் மாத்திரைகள்அவசியமா அல்லது கட்டுக்குள் வந்தவுடன... மேலும் பார்க்க

Doctor Vikatan: கருஞ்சீரகம் மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகுமா?

Doctor Vikatan: கருஞ்சீரகம் என்பது மரணத்தைத் தவிர எல்லா நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும், அதை எல்லோரும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிறைய செய்திகள், வீடியோக்கள் பார்க்கிறோம். உண்மையிலேயே க... மேலும் பார்க்க