செய்திகள் :

Dubai: துபாய்க்கு பயணம் செய்யும் அல்லது பிளான் இருக்கும் இந்தியரா நீங்கள்?- இனி 'இது' உங்களுக்கு ஈஸி

post image
இந்தியாவின் UPI ஐக்கிய அமீரகத்தின் மாக்னட்டி (அந்த நாட்டு UPI போன்றது) உடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்று NPCI சர்வதேச பேமெண்ட் லிமிடட் அறிவித்துள்ளது.

அதன் படி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக்குப் பயணம் செல்லும் இந்தியர்கள் இந்திய UPI - யிலிருந்து கியூ.ஆர் கோடை ஸ்கான் செய்து கட்டணம் அல்லது பணம் செலுத்தலாம்.

உலக அளவிலான ஆன்லைன் கட்டண வசதிகளில் மிகவும் பெற்றிப்பெற்ற மாடல் இந்திய 'UPI'. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் UPI மூலம் 16 பில்லியன் எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

Dubai-க்கு பயணம் செய்யப்போறீங்களா?!

இப்போது ஐக்கிய அமீரகத்துடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், ஆண்டுக்கு இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு பயணிக்கும் சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் நிலையாக, UPI-யை துபாய் ட்யூட்டி - ஃப்ரீ கடைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக இந்த வசதி ஹோட்டல்கள், போக்குவரத்து, ஷாப்பிங் போன்றவைக்கு விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.