Naan Mudhalvan திட்டத்தில் UPSC உதவித்தொகை பெறுவது எப்படி? - Dr.Sankara Saravana...
ENG vs IND: "இவையெல்லாம் கில்லின் கவனத்தைச் சிதறடிக்கலாம்" - கில்லுக்கு சச்சின் அறிவுரை
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன்20) ஹெட்டிங்லி மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் போட்டிக்கு முன்பு சுப்மன் கில்லுக்கு சச்சின் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

"இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவரைச் சுற்றி பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் வரும் என்பது எனக்குத் தெரியும். இவையெல்லாம் அவரின் கவனத்தைச் சிதறடிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அதைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்டம் குறித்தும், அணி குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு சுப்மன் கில் முடிவு எடுக்க வேண்டும் ” என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...