தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
Erode: 'ஓய்ந்த அனல்; கருத்தியல் மோதல்; திமுக vs நாதக' - ஈரோடு இடைத்தேர்தல் ரவுண்ட் அப்
ஈரோடு எம்.எல்.ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமான நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. கடந்த ஒருவாரமாக சூடு பிடித்த பிரசாரம் நேற்று (பிப் 3) மாலையோடு முடிவடைந்தது.
நேற்று மாலை 6 மணியோடு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. திமுக தரப்பில் விசி சந்திரகுமாரும், நாதக தரப்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாகப் போட்டியில் இருக்கின்றனர். சமீபத்தில் சீமான், தந்தை பெரியாரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தது தமிழக அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டிலேயே, பெரியாரை விமர்சித்து பேசியதால் வாக்குச் சேகரிப்பின்போது அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டன. 'நா.த.க'வினர் வாக்குச் சேகரிப்பதில் பல சிக்கல்களும் ஏற்பட்டன.
கொங்குப் பகுதியில் வலுபெற முயற்சிகள் எடுத்துவரும் 'தி.மு.க', இதை முக்கியமான தேர்தலாகப் பார்க்க்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகவும் கணக்குப் போட்டு, 'தி.மு.க' இந்தத் தேர்தலில் கவனம் செலுத்தியிருக்கிறது. கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார்.
கொங்குப் பகுதியில் 'அ.தி.மு.க' கை ஓங்கியிருந்தாலும், ஈரோடு தொகுதி காங்கிரஸின் கோட்டையாகவே இருந்தது. இப்போ அதை 'தி.மு.க'வின் கோட்டையாக்குவதற்கு மு.க. ஸ்டாலின் மும்முரம் காட்டி வருகிறார். தி.மு.க வேட்பாளராக நிற்கும் சந்திரகுமார், கடந்த 2011–2016 காலகட்டத்தில், இதே தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது தி.மு.கவிற்குக் கூடுதல் பலமாக மாறியிருக்கிறது.
தி.மு.க அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, சக்கரபாணி,எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் தி.மு.க சார்பில் தொகுதியில் வார்டுகளைப் பிரித்துத் தேர்தல் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி என முக்கிய தலைவர்கள் நேரடி பரப்புரையில் ஈடுபடவில்லை. எதிர்த்துப் போட்டியிடும் 'நா.த.க' வை டெபாசிட்டை இழக்க வைக்க வேண்டும் என்பதே 'தி.மு.க'வின் தேர்தல் திட்டமாக உள்ளது.
சீமான் பா.ஜ.க, அதிமுக வாக்குகளுக்குக் குறி வைத்து வருகிறார். ஆனால், தந்தை பெரியார் பற்றிய சீமானின் பேச்சுகள் ஈரோட்டில் 'நா.த.க'-க்கு என்ன மாதிரியான வாக்குகளை பெற்று தரும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது
சமூக வாக்குகள், கருத்தியல் போர்கள் என ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல்வீசி, ஓய்ந்திருக்கிறது. பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்கள் தீர்ப்பைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs