செய்திகள் :

Flight Crash: அஜர்பைஜான் விமானம் ரஷ்ய ராணுவத்தால் சுடப்பட்டதா? - திடுக்கிட வைக்கும் தகவல்கள்!

post image

Azerbaijan Flight Crash: கடந்த 25-ம் தேதி அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் விமானம் கஜகஸ்தானில் விழுந்து 38 பேர் மரணித்தனர். இந்த விபத்துக்கான காரணம் துல்லியமாக தெரியாத நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால்தான் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

62 பயணிகள் மற்றும் 5 குழு உறுப்பினர்களுடன் புறப்பட்ட விமானம் புதன்கிழமை கஜகஸ்தானில் உள்ள அக்டௌ நகரில் வீழ்ந்தது. இதுவரை 32 பேர் விமானத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

போர் நடந்த இடத்திலிருந்து திசை மாற்றம்!

அஜர்பைஜான் விமானம் J2-8243 ரஷ்யாவின் செச்னியா பகுதிக்கு அருகாமையில் சென்று அங்கிருந்து திசை திரும்பி கஜகஸ்தானின் அக்டௌ நகருக்கு அருகில் விழுந்துள்ளது. செச்னியா பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் போர் விமானங்களை சமாளிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான எம்ப்ரேயர் பயணிகள் விமானம் அஜர்பைஜானின் பாகு (Baku) நகரிலிருந்து வடக்கு ரஷ்யாவின் செச்னியா பகுதியில் உள்ள க்ரோஸ்னி நகருக்கு செல்லவிருந்தது. ஆனால் அதன் திட்டமிட்ட பாதையிலிருந்து பல நூறு மைல்கள் தாண்டி வீழ்ந்துள்ளது.

விமான பாதை

சில வாரங்களுக்கு முன்பு வரை செச்னியாவில் உக்ரைன் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சரியாக அந்த பகுதியில் இருந்து பாதை விலகிய விமானம் அதற்கு எதிர் திசையில் காஸ்பியன் கடலின் மறுகரையில் வீழ்ந்துள்ளது.

பறவை மோதியதா?

முன்னதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு, பறவை தாக்கியதாலேயே இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறியது. ஆனால் விமானம் காஸ்பியன் கடலைக் கடந்து மறுகரையில் விழுந்தது ஏன் என ரஷ்ய அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.

ரஷ்யாவின் பான்சிர்-எஸ் என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாலேயே விமானம் சுடப்பட்டதாகக் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரோஸ்னி நகரை அணுக விமானத்திலிருந்தவர்கள் முயலுகையில் போர் முறை மின்னணு முடக்குதல் அமைப்புகளால் தொடர்புகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

முழுமையான விசாரணை...

அஜர்பைஜான் தரப்பிலிருந்து ரஷ்யா வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியது எனக் கூறவில்லை என்றாலும், ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளே விபத்துக்கு காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று நினைப்பதாக ராய்ட்டர்ஸ் தகவல்கள் கூறுகிறது.

விமான விபத்து குறித்த காட்சிகளைப் பார்க்கையில் விமானத்தின் வால்பகுதியில் இருக்கும் இடிபாடுகள் anti-aircraft ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என விமானப் பாதுகாப்பு நிறுவனமான Osprey Flight Solutions தெரிவிக்கிறது.

மேலும் விமானத்தின் பாதையெங்கிலும் ஜி.பி.எஸ் தொடர்பில் சிக்கல் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென நேட்டோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் மேற்படி விசாரணை நடைபெறும் என கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Plane crash - Live Updates: விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்... 42 பேர் பலி; புதின் இரங்கல்

அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய விமானம்... 42 பேர் பலி; புதின் இரங்கல்கஜகஸ்தான்கஜகஸ்தானில் விமானம் அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ... மேலும் பார்க்க

Plane crash : அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய விமானம்... 42 பேர் பலி | அதிர்ச்சி வீடியோ

அஜர்பைஜான் தலைநகரிலிருந்து ரஷ்யாவுக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம், கஜகஸ்தானில் அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.முன்னதாக, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நி... மேலும் பார்க்க

ஈபிள் டவரில் `தீ' விபத்து; 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் - என்ன நடந்தது?

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈபிள் டவர் உள்ளது. உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான இந்த ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,200 சுற்றுலா பயணிகள் இந்த டவரைக் ... மேலும் பார்க்க

புனே: குடிபோதையால் விபரீதம்; சாலையோரம் உறங்கியவர்கள் மீது லாரி மோதி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி!

புனேயில் இன்று காலையில் நடந்த விபத்தில் டிப்பர் லாரியொன்று சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. புனே வகோலி என்ற இடத்தில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அந்த வழி... மேலும் பார்க்க

மும்பை: கடலில் தத்தளித்த 100 பேர்; பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் 13 பேர் இறப்பு!

மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து எலிபெண்டா கேவ்ஸ் உட்பட பல இடங்களுக்கு பயணிகள் படகு இயக்கப்படுகிறது. கேட்வே ஆப் இந்தியா அருகில் தான் கடற்படை தளமும் இருக்கிறது. எலிபெண்டா கேவ்ஸ் மிகவும் பிரபலமான ச... மேலும் பார்க்க

Nilgiris: 15 வீடுகளை சேதப்படுத்திய யானைகள்... பாதை மாறி ஊருக்குள்‌ நுழைய என்ன காரணம்?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றான நீலகிரி, கூடலூர் வனக்கோட்டத்தில் தொடரும் காடழிப்பு, யானைகளின் வாழிடம் மற்றும் வழித்தட ஆக்கிரமிப்பால் ஏதுமறியா அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் ... மேலும் பார்க்க