நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
Gold History: நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா? அறிவியல் சொல்வதென்ன?
கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு சரசரவென ஏறியது. திடீரென கிராமுக்கு 160 ரூபாய் குறைந்த செய்தியே நம்மை பெருமூச்சு விட வைக்கிறது. தங்கத்தின் மேல் நமக்கு அப்படியென்ன பிணைப்பு. மற்ற உலோகங்களைப் போலல்லாமல், இந்து மற்றும் ஜெயின் மதங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது தங்கம்.
இந்திய கலாச்சாரத்தில் தங்கத்துக்கு தனியிடம் உண்டு. எத்தனை குழந்தைகளுக்கு பொன் - தங்கம் எனப் பெயரிட்டுள்ளனர். எத்தனைக் குழந்தைகளை தங்கமே என கொஞ்சி மகிழ்கின்றனர். இந்த தங்கத்துக்காக நடந்த போர்கள், சூழ்ச்சிகள் வரலாற்றில் எத்தனை எத்தனை...
பூமியிலேயே மதிப்புமிக்க பொருள் என்றால் அது தங்கம்தான். தங்கத்துக்கு மட்டும் ஏன் இத்தனை மதிப்பு என்றக் கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். அதற்கு பதில் காணும் முன், அறிவியல் சொல்லும் தங்கத்தின் கதையை சுருக்கமாகப் பார்க்கலாம்.
விண்ணைத் தாண்டி வந்த தங்கம்!
மற்ற உலோகங்கள், தாதுக்கள் பூமியில் உருவாவதுப் போல தங்கம் உருவாவதில்லை. தங்கம் தோன்ற மிகப் பெரிய அளவில் வெப்பமும் ஆற்றலும் தேவை.
அந்த அளவு அதிக ஆற்றல் நட்சத்திரங்கள் மரணிக்கும் போது உருவாகும் சூப்பர்நோவாவில் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் இணையும் போது தான் உருவாகும்.
இந்த தீவிர சூழல்களில் விரைவான நியூட்ரான்-பிடிப்பு செயல்முறை (rapid neutron-capture process) அல்லது ஆர்-செயல்முறை ( r-process ) எனும் நிகழ்வின் மூலம் கடினமான கூறுகள் (தங்கம்) உருவாகும்.
எளிமையாக, நட்சத்திரங்கள் மோதும் போது அல்லது வெடிக்கும் போது எண்ணிலடங்கா டிகிரி வெப்பநிலையில் உருவான சாம்பலே தங்கம்.
தங்கம், யுரேனியம் போன்ற கடினமான தனிமங்கள் கருந்துலையில் உருவாகலாம் என்றும் அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கருந்துலையில் மிகப் பெரிய அளவில் மோதல்கள் மற்றும் வெடிப்புகள் நடக்கின்றன.
தங்கம் எப்படி பூமிக்கு வந்தது?
பூமி உருவாகும் போதே இப்போதுள்ள மொத்த தங்கமும் இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதாவது பூமி உருவாகும் முன்பே நட்சத்திரங்களில் இருந்து தங்கம் இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.
புவியின் உருவாக்கத்தின் இரும்பு பேரழிவு (iron catastrophe) காலம் என ஒரு காலத்தை குறிப்பிடுவர்.
அதாவது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியின் வெப்பநிலை கிட்டத்தட்ட இரும்பு உருகும் அளவுக்கு அதிகமாக இருந்ததாம்.
அந்த காலத்தில் தங்கம் உள்பட கடினமான பல உலோகங்கள் பூமிக்கு நடுவில் சென்றுவிட்டன என்கின்றனர். அதன் பின்னரே புவி உருவாகியிருக்கிறது.
புவியின் மேற்பரப்பில் தங்கம் எப்படி வந்தது?
200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவில் விண்கற்கள் மற்றும் சிறு கோள்கள் புவியைத் தாக்கியிருக்கின்றன.
அப்போது தான் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் பூமிக்கு விண்கற்கள் மூலம் வந்து சேர்ந்திருக்கின்றன. அவை உருகி புவியின் மையத்துக்கும் சென்றன. அதன் பிறகும் சிறிய கற்கள், சிறுகோள்கள் பூமியைத் தாக்கின. அப்போது மையத்திலிருந்த தங்கம் லேசாக மேல் மட்டத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது என்கிறது Learn about gold வலைத்தளம்.
நிலப்பரப்பை பொறுத்தவரையில் எல்லா கண்டங்களிலும் தங்கம் இருக்கிறது. நிலநடுக்கங்களும் தங்கம் மேற்பரப்புக்கு வர உதவியிருக்கின்றன.
உலகில் இப்போது எவ்வளவு தங்கம் உள்ளது?
பூமியிலிருந்து மனிதர்களாகிய நாம் இதுவரை 1லட்சத்து 90 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுத்திருக்கிறோம் என பிபிசி வலைத்தளத்தில் 2020-ல் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுகிறது.
இதில் 60 விழுக்காடு மேற்பரப்பு சுரங்கங்களிலும் மீதம் நிலத்தடி சுரங்கங்களிலும் இருந்து எடுக்கப்படுகிறது.
அப்போதைய கணக்குப்படி இன்னும் 50 ஆயிரம் டன்கள் மட்டுமே நாம் வெட்டி எடுக்க வேண்டும் என்கின்றனர்.. இந்த கணக்கு மாறலாம்.
இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கத்தையும் சேர்த்தாலும் 4 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை மட்டுமே நம்மால் நிரப்ப முடியும்.
இவ்வளவு குறைவாக இருப்பதனால் தான் தங்கத்து இவ்வளவு அதிக மதிப்பு இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb