இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
Gold Rate: 'உயர்வு!' - தங்கம் விலை என்ன... பட்ஜெட்டால் மாற்றம் நிகழுமா?!
மத்திய பட்ஜெட்டிற்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15-ம், ஒரு பவுன் தங்கம் ரூ.120-ம் உயர்ந்துள்ளது.
இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.7,610.
இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.60,880.
இன்று ஒரு கிராமுக்கு வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.106 ஆக விற்பனை ஆகிவருகிறது.
கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி குறைத்ததால் தங்கம் விலை சற்று குறைந்தது. அப்படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் குறித்து முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டால் தங்கம் விலையில் மாற்றம் நிகழலாம்...ஆனால் அது எந்த மாற்றம் (உயர்வா...குறைவா) என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.