இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!
Google: ``வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்யுங்கள்.." - இணை நிறுவனர் செர்ஜி பிரின் சொல்வதென்ன?
ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும் என்றும் வாரநாள்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தெரிவித்திருக்கிறார்.
2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ChatGPT-யால் வளர்ச்சியடைந்த AI தொழில்நுட்ப சந்தையில் பெரும் போட்டி நிலவுகிறது. அதனால் AI தொழிற்நுட்ப வளர்ச்சி உச்சியை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வாரத்துக்கு மூன்று நாள்கள் நேரில் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ``செயற்கை பொது நுண்ணறிவு (AGI), ஜெமினி AI தொழில்நுட்பம் உள்ளிட்டப் பிரிவுகளில் வேலைசெய்யும் ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வார வேலை நாள்களில் அலுவலகத்தில் இருக்கும்படி நாள்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஊழியர்கள் கடினமாக உழைத்தால், மனித நுண்ணறிவை விஞ்சும் ஒரு மைல்கல்லான AGI ஐ அடைவதில், கூகுள் தொழில்துறையை வழிநடத்த முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம் நமது முயற்சிகளை டர்போ சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
அதற்காக வாரத்திற்கு 60 மணிநேர வேலை என்பது உற்பத்தித்திறனின் அற்புதமான இடம். 60 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வது சோர்வை ஏற்படுத்தும். அதே நேரம் ஊழியர்கள் அதை விட குறைவான நேரம் வேலை செய்வது அல்லது குறைந்தபட்சமாக வேலை செய்வது உற்பத்தியற்றது மட்டுமல்ல, மற்ற அனைவருக்கும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தும். "எனக் குறிப்பிட்டிருக்கிறார். கூகுள் இணை நிறுவனரின் இந்த அறிவிப்பு கூகுளின் தற்போதைய அலுவலக வேலை நேரக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
