Inbox 2.0 Eps 21: Harris Jayaraj இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா! | Cinema Vika...
Guinea: கால்பந்து விளையாட்டில் ரசிகர்களிடையே மோதல்; 100 பேர் மரணித்திருக்கலாம்... என்ன நடந்தது?
கினியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான செரீகோர் நகரில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையில் நடந்த மோதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
AFP செய்தித் தளம் வெளியிட்டள்ள அறிக்கையின்படி, பெயரை வெளிப்படுத்த விரும்பாத மருத்துவர் ஒருவர் மருத்துவமனையின் நிலையை விளக்கியுள்ளார். அவர், "மருத்துவமனை முழுவதும் உடல்களால் நிறைந்திருக்கிறது. நடைபாதைகளிலும் உடல்களை வைத்திருக்கின்றனர். பிணவறை நிரம்பிவிட்டது." என்று கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 100 பேர் மரணமடைந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிக்குப் பிறகு நடந்த கலவரம் என சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவிவருகின்றன. இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.
நடந்த கலவரத்தில் செரீகோர் காவல்நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கினியாவின் ராணுவத் தலைவரான மமதி டூம்பூயாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. மமதி டூம்பூயா 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கினியாவின் அதிபராக தன்னை நியமித்துக்கொண்டவர்.
போத்தியில் நடுவரின் குறிப்பிட்ட முடிவு விவாதத்தை எழுப்பியதே மோதல்களுக்குக் காரணம் என்கின்றனர்.
சர்சதேச சட்டங்களின்படி, டும்பூயா 2024ம் ஆண்டே குடிமக்களில் ஒருவருக்கு அதிபர் பதவியை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, 2025 நிச்சயம் கினியாவில் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
தேர்தலில் வெற்றிபெறுபவர் தலைமையில் அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலான ஆட்சி நடைபெறும்.
மேற்கு ஆப்ரிக்காவில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் ராணுவத் தலைவர்கள் பதவிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.