செய்திகள் :

Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ - ஹாரிஸ் கொடுத்த அப்டேட்

post image

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. 

ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பிறகு மீண்டும் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அவ்வப்போது படங்களில் நடித்து, விடுபட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜிவிஎம், " “எல்லா தடைகளையும் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட முழு சக்தியையும் பயன்படுத்தி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.

தரமான ஆக்‌ஷன் திரில்லர், முதல் முறையாக ஜிவிஎம் - விக்ரம் காம்போ, பாடகர் பால்டப்பாவின் 'His Name is John' ஹிட் பாடல் என படம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இப்படம் என்றைக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன்

இந்நிலையில் இன்று (பிப் 28) செய்தியாளர் சந்திப்பில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "ரொம்ப நாளாக எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருந்து 'துருவ நட்சத்திரம்' படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) தியேட்டர்ல ரிலீஸாகப் போகுது. நானே பலமுறை அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். ரிலீஸ் அன்னைக்கு எல்லாரோடும் சேர்ந்து பார்ப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

Good Bad Ugly: `AK is red Dragon' ; `டேவிட் பில்லா' ரெபரென்ஸ் - மீண்டும் கேங்ஸ்டராக அஜித்!

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. `மார்க் ஆண்டனி' வெற்றிக்குப் பிறகு இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருக்கிறார். `விடாமுயற்சி' திரைப்படத்தை தொ... மேலும் பார்க்க

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்... இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' - தேசிங்கு பெரியசாமி

`ஜோ' படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்'. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில... மேலும் பார்க்க

அகத்தியா விமர்சனம்: `வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ!' சித்த மருத்துவம் x அலோபதி விவாதம் தேவைதானா?

சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ... மேலும் பார்க்க

`ரஜினி சாரிடம் எங்க அப்பா சொன்ன வார்த்தை..!' - ஜெயம், எம்.குமரன் ரீரிலீஸ் பற்றி இயக்குநர் மோகன் ராஜா

'ஜெயம்', 'எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரீரிலீஸ்ரவி மோகன் அறிமுகமான 'ஜெயம்', ''எம் குமரன் s/o மகாலட்சுமி' படங்கள் இப்போது ரீரிலீஸ் ஆக உள்ளன. எடிட்டர் மோகன் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நட... மேலும் பார்க்க

What to watch on Theatre: சப்தம், அகத்தியா, கூரன் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

சப்தம் (தமிழ்)சப்தம்'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்த... மேலும் பார்க்க