செய்திகள் :

HBD Rajini: `1991-ல் வெளியான `தளபதி' ; `அட... வெரிகுட்’ ஆனந்த விகடன் விமர்சனத்தின் ஹைலைட்ஸ்!

post image
1991-ல் விகடனில் வெளிவந்த `தளபதி' படத்தின் விமர்சனத்தின் முக்கிய பாயின்ட்ஸ் இங்கே!

* அதிரடியாய் ஆயுத அரசாங்கம் நடத்தி, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நியாயம் வழங்குகிற 'தாதா' மம்மூட்டி! அவரது அடியாளாக வரும் ஒருத்தன் அநியாயம் செய்ய, ரஜினி கொஞ்சம் ஒங்கித் தட்டிவிடுகிறார். ஆள் அவுட்... ரஜினி கம்பிகளுக்குப் பின்னால்! தன்னுடைய ஆள் செய்த அராஜகத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அடிமனசு நியாயம் உந்தித்தள்ள, ரஜினியை வெளியே கொண்டுவந்துவிடுகிறார் மம்மூட்டி!

* மம்மூட்டியும் ரஜினியும் ஆரம்பத்தில் பரம வைரிகளாய் மோதுகிறபோது. 'ஐயையோ... படம் முழுக்க இப்படித் தானா... என்ற பீதி லேசாக எழுகிறது. ஆனால். ஜெயிலிலிருந்து தன்னை விடு வித்தவன் என்ற ஒரே காரணத்துக்காக மம்மூட்டியிடமே போய்ச் சேருகிறார் ரஜினி. அதுவும் எப்படி, எடுத்த எடுப்பிலேயே உயிர்த்தோழனாக! மம்மூட்டியும் அவரைத் தழுவிக்கொள்ள. அந்தக் காட்சியில் மட்டும் ..'தாதா' திடீரென்று சாதா' வாகிவிடுகிறார்! விதவை பானுப்ரியாவுக்குப் போதுமான `வாழ்க்கைப் பாதுகாப்பு' இல்லை என்று உறைக்கிறபோது மம்மூட்டி ரஜினியைக் கூப்பிட்டு, "இவ நெத்தியில பொட்டு வை!" என்று கட்டளையிடுகிறார்.

Thalapathy Poster

* அவர் உரிமையோடு எடுத்த எதேச்சாதிகார முடிவும், கை நடுங்க ரஜினி குங்குமம் வைப்பதைப் பார்க்கிறபோது அவர் முகத்தில் உண்டாகிற திருப்தியும் வித்தியாசமானவை. ஏக காலத்தில் நடந்து முடிகிற அந்தக் 'கல்யாண விறுவிறுப்பு மணிரத்னத்தின் லாகவத்துக்குச் சரியான உதாரணம்!யாரையாவது அநாவசியமாய் அடிக் கிறாரா? இல்லை! உறுமியபடி 'டைவ்' அடித்துச் சண்டை போடுகிறாரா? இல்லை. அப்புறமும் அந்தப் 'பயங்கர' மதிப்பை மம்மூட்டி எப்படிச் சம்பாதிக் கிறார். அதுதான் மம்மூட்டி! பிரமாதம்' என்று கிறக்கத்துடன் சொல்ல வைக்கிற பிரமையை 'ராக்கம்மா...' பாட்டிலேயே ஏற்படுத்தி விடுகிறார் இளையராஜா. காட்சியில் வரும் இயற்கையான சத்தங்களைத் தன் இசையோடு அற்புதமாகக் கலந்திருப்பது ஒரு இன்பச் சிலிர்ப்பு!

*தன் அப்பா பார்த்த கலெக்டர் பையனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதித்துவிட்டு, தன் இயலாமையைச் சொல்ல ரஜினியிடம் வருகிறார் ஷோபனா . ஒரு சராசரிப் பெண்ணால் இதுதான் முடியும்' என்று புரிந்தாலும், வேதனையைக் காட்டவேண்டிய இடத்தில் ஆற்றாமை பொங்கக் கோபத்தில் ரஜினி சீறுகிறார். காட்சிக்குத் தேவையான சோகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.

Thalapathy Poster

* ஒரு காதல் தோல்வி அடைந்த அவலத்தை விளக்குகிற அந்தச் சிதிலமான கட்டடப் பின்னணியும் சரி.. மேற் கொண்டு பேச முடியாமல் தளர்வாய் நடந்து மறைகிற ஷோபனாவும் சரி.. வேதனையை இன்னும் கூட்டுகிறார்கள்.

* 'தன் மகன்' என்று தெரிந்து ரஜினியை ஸ்ரீவித்யா சந்திக்கிற உருக்கத்தைவிட, அதற்கு முன்பே ஜெய்சங்கர் ரஜினியைச் சந்தித்து நிதானமாக உண்மையைச் சொல்லுகிற காட்சியில் ஆழம் அதிகம் பழைய கதையை ஜெய்சங்கர் சொல்லச் சொல்ல. மகிழ்ச்சியும் வேதனையும் கூடிக் குறைய உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறது ரஜினி முகத்தில்! இப்படி ரொம்ப நாளைக்கப்புறம் ரஜினிக்கு உணர்ச்சிகரமான ஸீன்கள் நிறைய! சின்னக் கூண்டுக்குள் அடைக்கப் பட்ட சிங்கத்தை வெளியே விட்டது போலிருக்கிறது!

விகடனின் ஸ்டார்ட் ரேட்டிங்கில் அப்போது 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, `அட.... வெரிகுட்’

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Keerthy Suresh: `நெஞ்சமே நெஞ்சமே!' - கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம்

கீர்த்தி சுரேஷூக்கும் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என அனைத்து பக்கமும் பரிச்சயமான கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் தடம் ப... மேலும் பார்க்க

தளபதி : `ஏன்னா நீ என் நண்பன்..!’ - ஒரு 2K கிட்டின் `தளபதி' ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம்

ரஜினியின் 74-வது பிறந்தாநாள் இன்று.அதையொட்டி ஸ்பெஷலாக `தளபதி' படத்தை ரீ - ரிலீஸ் செய்திருக்கிறார்கள். `ரீ மாஸ்டர்' செய்யப்பட்ட வெர்ஷனுடன் இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது ரீ ரிலீஸ் காலம்... மறு ... மேலும் பார்க்க

Rajini: ``பேரன்பிற்குரிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு..'' - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்

திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் இன்று தனது 74- வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவி... மேலும் பார்க்க

G.V.Prakash: ``என் கரியரில் பெரிய ஹிட்ஸ் கொடுத்தது ஜி.வி சார்தான்" - நெகிழ்ந்த சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.இருவருக்கும் 'அன்வி' எனும் மகளும் உள்ளார். 11 வருட காதல் திருமண வாழ்க்... மேலும் பார்க்க

Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ராமசாமி சொல்வதென்ன?

இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சீனு ராமசாமி - ஜி.எஸ்.தர்ஷனா தம்பதியின்17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இதுகுறித்த அவரது பதிவில... மேலும் பார்க்க