செய்திகள் :

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

post image

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வேர்க்கடலை மட்டுமே பிடிக்கும். கடலை எண்ணெயில சுட்ட தோசைனா பலருக்கும் பிடிக்கும். கொஞ்ச பேருக்கு வேர்க்கடலைனாலே அது பக்கோடா மட்டும்தான். 2 கே கிட்ஸுக்கோ பீனட் பட்டர்னா உயிர். இதுல எந்த முறையில வேர்க்கடலையை சாப்பிடுறது ஆரோக்கியம், எவ்ளோ சாப்பிடணும் அப்படிங்கிற தகவல்களை இங்கே டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் விளக்குறாங்க.

வேர்க்கடலை

''வேர்க்கடலைங்கிறது பல பேரு நினைச்சிட்டிருக்கிற மாதிரி பயிறு கிடையாது. அது ஓர் எண்ணெய் வித்து. அதுல கொழுப்பு அமிலங்கள் நிறைஞ்சிருக்கு. அதாவது, 100 கிராம்ல 44 கிராம் கொழுப்புச்சத்து இருக்கு. புரதச்சத்தும் 26 கிராம் இருக்கு. கொழுப்பும் புரதமும் அதிகமா இருக்கிறதால, வேர்க்கடலை செரிமானமாக அதிக நேரமாகும். இதனால, பித்தநீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, உடல்ல பித்தம் அதிகமாக காரணமாகிடுது. ஏற்கெனவே, உடம்புல பித்தம் அதிகமா இருக்கிறவங்க வேர்க்கடலை சாப்பிடுறத தவிர்க்கிறதே நல்லது. மத்தவங்க, வாரத்துக்கு 2 அல்லது 3 முறை 20 கிராம் மட்டும் எடுத்துக்கலாம். இதுக்கு மேல அதிகமா சாப்பிட்டா அடுத்த வேளை பசியெடுக்காது. இதனால, உங்க பசியோட சுழற்சி பாதிக்கப்படும். வேர்க்கடலையை வேக வெச்சு பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், எலுமிச்சை பழச்சாறு அல்லது பெரிய நெல்லிக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டா பித்தம் குறையும்.

உடல் எடையைக் குறைக்க நினைக்கிறவங்க, சாலட் சாப்பிடுவாங்க. அதுல ருசிக்காக சிலர் கைப்பிடி வேர்க்கடலையையும் சேர்த்துப்பாங்க. 100 கிராம் வேர்க்கடையில 550 கலோரி இருக்கிறதால, உடல் எடையைக் குறைக்க வேண்டிய சாலட் உடல் எடையை அதிகமாக்கிடலாம், கவனம்.

வேர்க்கடலை சாலட்

வேர்க்கடலை பர்ஃபி மற்றும் வேர்க்கடலை உருண்டைப் பிரியர்களுக்கு ஒரு வார்த்தை. அது வெல்லக்கரைசல்ல செஞ்சதுன்னா, வாரத்துக்கு ஒண்ணு, ரெண்டு சாப்பிடலாம். இதுவே சர்க்கரையையே வெல்லப்பாகு கலர்ல கறுக்கி செஞ்சிருந்தா, அது வேண்டவே வேண்டாம். இத நாங்க எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டீங்கன்னா, வாங்கி பல நாளாகியும் மொறுமொறுன்னே இருந்தா அதுல இருக்கிறது வெல்லம் கிடையாது, சர்க்கரை.

எண்ணெயில பொரிச்ச மசாலா வேர்க்கடலை சாப்பிட்டா, கெட்ட கொழுப்பையும் சேர்த்து சாப்பிடுறீங்கன்னு அர்த்தம். பச்சை வேர்க்கடலையில ஆன்டி நியூட்ரியன்ஸ் இருக்கு. வேர்க்கடலையில இருக்கிற ஊட்டச்சத்துக்களை உடம்பு உறிஞ்சுறத இந்த ஆன்டி நியூட்ரியன்ஸ் தடுத்திடும்.

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலை சட்னி விரும்பிகளா நீங்க..? அதுல தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்தா வாரத்துக்கு மூன்று முறையும், மிளகாய், புளி, வேர்க்கடலை மட்டும் வெச்சு சட்னி செஞ்சா வாரத்திற்கு ரெண்டு முறையும் சாப்பிடலாம். அதுக்கு மேல நோ.

அடுத்து பீனட் பட்டர். இதுல புரதம், கலோரி, கொழுப்பு சத்து எல்லாமே அதிகம். ஏன்னா, இத தயாரிக்கிறப்போ, சர்க்கரை, உப்பு, பாமாயில்னு உடம்புக்கு கெடுதல் செய்ற பல பொருள்களை சேர்க்கிறாங்க. இதெல்லாம் இதய நோய் வர்றதுக்கு காரணம்கிறதால, பீனட் பட்டர்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. தேவைப்பட்டா வீட்லேயே பீனட் பட்டர் செஞ்சு சாப்பிட்டுக்கோங்க.

வேர்க்கடலையை முளைக்கட்டி சாப்பிடலாமாங்கிற கேள்வி பலருக்கும் இருக்கு. கொழுப்புச்சத்து அதிகமா இருக்கிறதால, பயிர்கள் மாதிரி வேர்க்கடலையை முளைக்கட்டி அப்படியே சாப்பிடக்கூடாது. அதையும் வேக வெச்சுதான் சாப்பிடணும். உப்புத்தண்ணி தெளிச்ச வறுத்த வேர்க்கடலையை வாரத்துக்கு ஒருநாள் சாப்பிடலாம். ரத்தக்கொதிப்பு இருக்கிறவங்க, அதையும் டாக்டர் ஆலோசனை கேட்ட பிறகே சாப்பிடுங்க. உப்புத்தண்ணி தெளிக்கலைன்னா, 2 அல்லது 3 நாள் சாப்பிடலாம். இது நல்லதுதான்.

தாரிணி கிருஷ்ணன்

வாவ், என்ன வாசனைன்னு கடலை எண்ணெயைக் கொண்டாடுறங்களா நீங்க..? கடலை எண்ணெயோட மற்ற தாவர எண்ணெய்களையும் சமையல்ல சேர்த்துக்கணும். ஒரு நாளைக்கு பயன்படுத்தும் 15ml எண்ணெயில் 5ml கடலை எண்ணெய்னா, 10 ml நல்லெண்ணெய் சேர்த்துக்கலாம். அல்லது 10ml கடலை எண்ணெயும் 5ml சூரியகாந்தி எண்ணெய் அல்லது அரிசித் தவிட்டு எண்ணெயைச் சேர்த்து பயன்படுத்தலாம். வேர்க்கடலையில புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் என அனைத்து சத்துகளும் இருக்கின்றன. ஆனா, கடலை எண்ணையில் கொழுப்புச்சத்து மட்டுமே இருக்கிறதால, நான் மேலே சொன்ன முறையில மட்டுமே கடலை எண்ணெயை சமையல்ல சேர்க்கணும்'' என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க

தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், 'உடலெல்லாம் வலிக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது' என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார... மேலும் பார்க்க