செய்திகள் :

HOMEBOUND Oscars: ``இந்தப் படைப்பு உலகமெங்கும் பல இதயங்களில் இடம்பிடிக்கும்'' - நெகிழும் படக்குழு

post image

இந்திய திரையுலகிற்குப் பெருமைசேர்க்கும் வகையில், 'Homebound' திரைப்படம் 2026 ஆஸ்கர் விருதுக்கு 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

நீரஜ் கய்வான் இயக்கிய இந்தப் படம், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஈஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Home Bound Movie
Home Bound Movie

Homebound முதன்முதலில் இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவின் “Un Certain Regard” பிரிவில் திரையிடப்பட்டது.

அதன் பின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றிருந்தது.

சர்வதேச அளவில் பெற்ற இந்த அங்கீகாரம், படத்தை இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கான வலுவான படைப்பாக உயர்த்தியது.

இந்த வெற்றியைப் பற்றி கரண் ஜோஹர் மிகுந்த பெருமிதத்துடன், “HOMEBOUND திரைப்படம் இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் என்ட்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதே எங்களுக்குப் பெரும் கௌரவம்.

நீரஜ் கவ்வானின் உழைப்பும் அன்பும் நிறைந்த இந்தப் படைப்பு உலகம் முழுவதும் பல இதயங்களில் இடம்பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்

இயக்குநர் நீரஜ் கவ்வான் பேசும்போது, “இந்த படம் நம் நிலம், நம் மக்களிடம் கொண்ட அன்பில் வேரூன்றியிருக்கிறது.

உலகளாவிய மேடையில் இந்தியக் கதைகளை வெளிப்படுத்துவது பெருமையும் பணிவும் தருகிறது. இந்த வாய்ப்பிற்காக நான் மனமார்ந்த நன்றியுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

'ஷாருக் கற்றுக்கொடுத்த பாடம்; 18 ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன்'- நடிகை தீபிகா படுகோனே பெருமிதம்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கல்கி 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தீபிகா படுகோனே விதித்த கடுமையான நிபந்தனைகளால் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த தீபிகா பட... மேலும் பார்க்க

Sydney Sweeney: பாலிவுட்டில் நடிக்க ரூ.530 கோடி? ஷாக்கான ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி; பின்னணி என்ன?

பாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்போது தயாரிக்கும் படங்களுக்கான செலவு ரூ.100 கோடியைத் தாண்டித்தான் இருக்கின்றன. அதுவும் பிரபல ஹீரோ நடிக்கும் படம் என்றால் பட்ஜெட் மேலும் அதிகரிக்கிறது. பாலிவுட்டில் இது வரை ப... மேலும் பார்க்க

Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் கஷ்யப் - காரணம் என்ன?

பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி. இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம்... மேலும் பார்க்க

"ஆர்யன் கானிற்கு கேமரா முன் சிரிப்பதற்கு பயமாக இருக்கும்"- ராகவ் ஜுயால் சொல்லும் காரணம் என்ன?

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட் பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பாட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் சிரீஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஆர்யன் கான் இயக்கும் இந்த வெப் சிரீஸில் ராகவ் ஜுயால், மனோஜ் ப... மேலும் பார்க்க

Bahubali: "ராஜமாதாவாக ஶ்ரீதேவி நடிக்காததற்குக் காரணம் இவர்கள்தான்" - உடைத்துப் பேசும் போனி கபூர்

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) தயாரிப்பில், பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணாடகுபதி, சத்யராஜ், நாசர் ஆகியோர் நடித்த பாகுபலியின் இரண்டு பாகங்களும்... மேலும் பார்க்க

"சல்மான் கானிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி அனுராக் காஷ்யப் சொன்னார்" - 'தபாங்' பட இயக்குநர் பளீச்

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படத்தை இயக்குநர் அபினவ் காஷ்யப் இயக்கினார். இவர் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சகோதரர் ஆவர். தபாங் படத்திற்குப் பிறகு... மேலும் பார்க்க