Rajini: "திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?" - ரஜினிகாந்த்த...
Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் கஷ்யப் - காரணம் என்ன?
பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி.
இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு.
செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ``கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ.
எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர்.
நான் ஒருவரின் பயோபிக் இயக்குகிறேன் என்றால், எல்லோருக்கும் தெரிந்த, பிரபலமானவரைத் தேர்வு செய்யமாட்டேன்.
நீண்ட தேடலுடன் கூடிய, உழைப்பைக் கேட்கும் கடினமான ஒன்றைதான் தேர்வு செய்வேன். அனால், விராட் கோலியின் பயோபிக்கை நான் எடுக்காமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...