செய்திகள் :

I Am Kathalan Review: `Gen Z இளைஞனின் சைபர் சேட்டைகள்' - மீண்டும் வென்றதா `பிரேமலு' கூட்டணி?

post image

கேரள மாநில திருச்சூரிலுள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிக்கும் விஷ்ணுவும் (நஸ்லென்) ஷில்பாவும் (அனிஷ்மா அனில்குமார்) காதலித்து வருகிறார்கள். விஷ்ணு கணினி சார்ந்த அத்தனை விஷயங்களையும் அலசி ஆராயும் வல்லவராக இருக்கிறார். ஆனாலும், விஷ்ணுவின் பொறுப்பற்ற குணத்தாலும், அரியர் பேப்பர்களாலும் கல்லூரி நாள்களோடு, இவர்களின் காதலும் முடிவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து, தன்னுடைய தந்தை சாக்கோ பெரியடனின் (திலீஷ் போத்தன்) நிதி நிறுவனத்தில் பணியில் சேர்கிறார் ஷில்பா.

உடைந்த காதலை மீண்டும் புதுப்பிக்க, ஷில்பா வேலை செய்யும் இடத்திற்கே விஷ்ணு செல்ல, அங்கே சாக்கோவின் கண்ணில் படுகிறார். விஷ்ணுவிற்கு சாக்கோவின் கைகளால் அடியும் விழுகிறது. இந்த அவமானத்திற்குப் பழிதீர்க்க, 'காதலன்' என்ற பெயரில் சாக்கோவின் நிறுவனத்துடைய சர்வரை ஹேக் செய்யும் விஷ்ணு, அடுத்தடுத்து என்னென்ன சைபர் சேட்டைகளைச் செய்கிறார், இறுதியில் காவல்துறையின் கைகளில் சிக்கினாரா, தன் காதலியுடன் இணைந்தாரா போன்ற கேள்விகளுக்கான பதில்களை சைபர் த்ரில்லராக பேசியிருக்கிறது கிரீஷ் ஏ.டி-யின் 'ஐ அம் காதலன்' மலையாளப் படம்.

Dileesh Pothan

வழக்கமான 'கிரீஷ் ஏ.டியின் கதாநாயகனாக' நஸ்லென். சின்ன சின்ன நையாண்டிகளை நிகழ்த்தும் 'லவ்வர்' பாய்யாகவும், பழிதீர்க்கப் பரபரப்புடன் சுற்றும் 'ஸ்மூத்' வில்லனாகவும் படத்தைத் தாங்குகிறார் நஸ்லென். காதலாலும், காதலனாலும் பரிதவிக்கும் சாதுவான காதலியாக அனிஷ்மா அனில்குமார் கவனிக்க வைத்தாலும், படத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கும் எமோஷனல் காட்சிகளில் தேவையான நடிப்பை வெளிப்படுத்தத் தவறுகிறார்.

காதலை எதிர்க்கும் வில்லன்/தந்தை என்ற டெம்ப்ளட் கதாபாத்திரம்தான் என்றாலும், ஆங்காங்கே கவுண்டர் காமெடிகளால் சிரிக்க வைத்து, அக்கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறார் திலீஷ் போத்தன். கொடுக்கப்பட்ட சிறு கதாபாத்திரத்தின் மீட்டரிலேயே கச்சிதமாக வந்து போகிறார் லிஜோ மோல். வினீத் வாசுதேவன், வினீத் விஸ்வம், கிரண் ஜோஸி ஆகியோர் காமெடி, எமோஷன் என மாறி மாறி பயணிக்கும் தங்களின் கதாபாத்திரங்களுடைய தன்மையை உணர்ந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

Naslen

கணினியின் கீப்போர்ட்டை க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டி, விறுவிறுப்பு மீட்டரை எகிற வைத்தது, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் மட்டுமே காட்சிகள் நகர்ந்தாலும், அவற்றை முடிந்தளவிற்குச் சுவாரஸ்யமாக்கியது என ஷரண் வேலாயுதனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம். படம் தொய்வடையும் சில இடங்களில், அதைச் சுறுசுறுப்பாக்கப் போராடியிருக்கிறது ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்ஸின் படத்தொகுப்பு. அதேநேரம், தேவையில்லாத மாண்டேஜ் ஷாட்களையும் கவனித்து, களையெடுத்திருக்கலாம். சித்தார்த் பிரதீப்பின் புதுமையான பின்னணி இசை படத்திற்குத் தூணாக நிற்கிறது. சித்தார்த் பிரதீப்பின் பாடல்களும் படத்தின் ஓட்டத்தோடு வந்து செல்கின்றன.

ஹைடெக் சைபர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், ஒரு மிட் டவுன், சூப் பாய், காதல் தோல்வி, பழிக்குப் பழிக்கு ஆகியவற்றை வைத்து 'ஃபீல் குட் சைபர் த்ரில்லரரைக்' கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இக்கதைக்களத்தை அதன் தன்மை மாறாமலும், தேவையான விறுவிறுப்பையும் சேர்த்து முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக மாற்ற முயன்றிருக்கிறது கிரீஷ் ஏ.டி, சஜின் செருகையில் ஆகியோரின் எழுத்துக் கூட்டணி.

எப்போதும் ஒரு `சைபர் த்ரில்லர்' திரைப்படங்களின் கதையை எலியை எடுத்துக்காட்டாக வைத்துச் சொல்லிவிட முடியும். ஒரு எலி (ஹேக்கர்) நாச வேலைகளை (சைபர் க்ரைம்) செய்துக் கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்கப் பொறி வைப்பார்கள். ஒன்று அந்த எலி அந்த பொறியில் சிக்கி விடும். இல்லையெனில் அந்த எலி அந்த பொறியில் சிக்காமல் தப்பித்துவிடும். ஆனால், இந்தப் படம் இந்த இரண்டும் இல்லாத ஒரு க்ளைமேக்ஸை கொண்டிருக்கிறது. மேலும், சைபர் தகவல்களைப் பெரிய பெரிய பின்னல்களாகப் போட்டு பார்வையாளர்களைக் குழப்பாமல், எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரிப்பது படத்தின் பலம். அளவான கதாபாத்திரங்கள், அவற்றின் தனித்துவமான குணங்கள், அவற்றைக் கச்சிதமாகக் கதையில் பயன்படுத்தியது போன்றவை கதைக்களத்தைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்கியிருக்கிறது.

கிரீஷ் ஏ.டி படங்களுக்கேயுரிய காமெடி ஃப்ளேவரிலேயே படம் நகர்கிறது. முக்கியமாக, ஒரு சைபர் குற்றவாளி எப்படி இருப்பார் என்ற விவரிப்பும், அதைக் கலாய்க்கும் காட்சிகளிலும் எனப் பல இடங்களில் காமெடிகள் கர்ஜித்தாலும், சில இடங்களில் கடிக்கவும் செய்கின்றன. காமெடிக்காக வைக்கப்பட்ட சில காட்சிகள் லாஜிக் ஓட்டைகளும் தரை தட்டுகின்றன.

Lijomol Jose

இரண்டாம் பாதி திரைக்கதையில் விறுவிறுப்பாக 'டாம் அண்ட் ஜெரி' விளையாடக் களமிருந்தும், அதை இரண்டு, மூன்று ட்விஸ்ட்களுக்காக மட்டுமே பயன்படுத்தியது ஏமாற்றம். இறுதிக்காட்சியும் ஒரு புதிய ட்விஸ்ட் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. மேலும், `சைபர் க்ரைம்' படங்களில் விஷுவல்களில் கோடிங் சார்ந்த விஷயங்களைச் சேர்க்கும் வழக்கொழிந்த செயலை இதிலும் தொடர்ந்திருக்கிறது.

'சைபர் க்ரைம்' கதைக்களத்தை காமெடி, காதல் கலந்து பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்ல முயன்று, அதில் பாதி வென்றிருக்கும் இந்த 'ஐ எம் காதலனின்' காதலுக்கு, அதன் ஃபீல் குட் தன்மைக்காக 'மீ டூ' சொல்லலாம்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`ஹேமா கமிட்டியிடம் அளித்த வாக்குமூலம்; வழக்கு எடுக்க கூடாது' - நடிகை மாலா பார்வதி கூறும் காரணமென்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

Allu Arjun: "பகத் பாசில் என்னுடன் புரோமோஷனுக்கு வராதது வருத்தம்தான்; ஆனால்..." - அல்லு அர்ஜூன்

̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். ஆந... மேலும் பார்க்க

Sookshmadarshini Review: துப்பறியும் நஸ்ரியா;`சேட்டை சேட்டன்' பேசில் ஜோசப் - த்ரில்லராக ஈர்க்கிறதா?

சுக்ஷம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என மலையாளத்தில் பொருள்.தன் கணவர், குழந்தை என சந்தோஷமான வாழ்க்கையில் இருக்கும் ப்ரியதர்ஷினிக்கு (நஸ்ரியா) வேலையில்லாமல் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பது ஒரு வெறுமைய... மேலும் பார்க்க

Kerala: ``நான் தற்கொலை செய்தால் அரசுதான் பொறுப்பு'' - பாலியல் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. 'மலையாளத் திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை' தொடர்பான புகார்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

AR Rahman: ஆடுஜீவிதம் படத்துக்காக HMMA விருதுபெறும் இசைப் புயல்!

கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்துக்காக HMMA விருதைப் பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் மீயூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (HMMA) என்பது திரைப்படம், டிவி நிகழ்ச்சி, வீடியோ கேம்கள், டிரெய்லர்கள்,... மேலும் பார்க்க