Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந...
INDvENG: "தோல்வி வருத்தம்தான்; ஆனாலும் T20-யில் நான் பார்த்து வியந்த பேட்டிங்..." - பாராட்டிய பட்லர்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இந்தத் தொடரின் கடைசிப் போட்டி நேற்று( பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், ``பேட்டிங்கில் நாங்களும் மிகச் சிறப்பாகத் தொடங்கியிருந்தாலும், இடையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு சரிவை ஏற்படுத்திவிட்டது.
இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அந்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் நாங்கள் பலமாக போட்டிக்கு திரும்புவோம். டி20 தொடரை இழந்தது வருத்தமாகதான் உள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் தற்போது மிகச்சிறந்த அணிகளுள் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது.
டி20-ல் நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த பேட்டிங் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவுடையதுதான். எங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் சிறந்த அனுபவமாக இருக்கும்" என ஜாஸ் பட்லர் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs