செய்திகள் :

IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!

post image

'பதற்றம்!'

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் இப்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

Operation Sindoor
Operation Sindoor

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்!' என்கிற மிஷனை முன்னெடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவியது.

இன்று இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் vs டெல்லி போட்டியும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இடையிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரும் இடையிலேயே நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக இப்போது லேட்டஸ்டாக ஐ.பி.எல் சேர்மன் அருண் துமால் ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

IPL
IPL

'ஐ.பி.எல் சம்பந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நிலைமையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். முக்கியமான முடிவை எடுத்தால் தெரியப்படுத்துகிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.

India - Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' - விளக்கம் சசி தரூர்

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. 'போர் வேண்டாம்... பதற்ற நிலை வேண்டாம்' ... மேலும் பார்க்க

India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துணை அதிபர் பேட்டி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதா... மேலும் பார்க்க

India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொடுத்த தக்க பதிலடி!

இந்தியா மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ஆனால், அந்த ஏவுகணைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளது இந்திய ராணுவம்.நேற்று இரவு, ஜம்முவின் எல்லைகளான சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா, ஆ... மேலும் பார்க்க

நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை... டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்!

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 7) 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.இந்தத் திட்டம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

Jaishankar: 'துல்லியமான பதிலடி' - உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துவரும் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் உடனான உர... மேலும் பார்க்க

உள்நாட்டிலும் மிகப்பெரிய தாக்குதல்; இருமுனை தாக்குதலால் தடுமாறும் பாகிஸ்தான்!

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது.இந்தியாவும், பாகிஸ்தானும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வரும் இந்த வேளையில், பாகிஸ்தானின் உள்நாட்டிற்குள்ளேயே பெரிய சிக்கல் எழ... மேலும் பார்க்க