செய்திகள் :

IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் 10 சவால்கள்; இதைச் சமாளிப்பார்களா?

post image

18 வது ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்கவிருக்கிறது. எல்லா அணிகளும் ஒரு நீண்ட கிரிக்கெட் சீசனுக்குத் தயாராகிவிட்டன. நிறைய புதிய கேப்டன்கள் அணிகளின் தலைமையை ஏற்றிருப்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமான அம்சமாக இருக்கிறது. புதிய கேப்டன்களோ பழைய கேப்டன்களோ எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் சில அழுத்தங்களும் சவால்களும் இருக்கவே செய்கின்றன. 10 அணிகள்; 10 கேப்டன்கள்; 10 சவால்கள் என்னென்ன?

ரஜத் படிதார் - RCB

ரஜத் பட்டிதர்

பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருப்பதே அழுத்தமான விஷயம்தான். 'ஈ சாலா கப் நம்தே!' என்கிற விஷயம் துரத்திக்கொண்டே இருக்கும். அனில் கும்ப்ளே, டிராவிட், வெட்டோரி, கோலி, டூப்ளெஸ்சிஸ் என அனுபவமும் ஸ்டார் அந்தஸ்தும் மிக்க வீரர்கள்தான் பெங்களூரு அணியை இதுவரை வழிநடத்தியிருக்கின்றனர். முதல் முறையாக ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஒரு வீரரை நம்பி பெங்களூரு அணி கேப்டன் பதவியைக் கொடுத்திருக்கிறது. மேலும், ரஜத் பட்டிதரை நீண்ட காலத்துக்கான ஆப்சனாக பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த முதல் சீசனிலேயே ரஜத் பட்டிதர் ஓரளவுக்காவது தன்னை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும்.

சீனியர்களும் ஸ்டார்களும் நிறைந்த அணியில் மற்ற வீரர்களின் தாக்கம் பெரிதாக இல்லாமல் சுயமாக கேப்டன்சி செய்துவிட்டாலே ரஜத் தப்பித்துவிடுவார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்தியிருக்கிறார் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேல் ரசிகர்களின் 'ஈ சாலா கப் நமதே' கனவை மட்டும் ரஜத் நிறைவேற்றிவிட்டால் அவருக்கு 'Life Time Settlement' தான்.

சுப்மன் கில்

சுப்மன் கில்

குஜராத் அணியை ஒரு சீசனில் சாம்பியனாகவும் இன்னொரு சீசனில் ரன்னர் அப்பாகவும் மாற்றிவிட்டு அணியிலிருந்து வெளியேறியிருந்தார் ஹர்திக் பாண்ட்யா. அவருக்குப் பிறகு கில் கேப்டன் ஆக்கப்பட்டிருந்தார். ஹர்திக் விட்டுச் சென்ற இடத்தை கில்லால் அப்படியே நிரப்ப முடியவில்லை. கடந்த சீசனில் சுமாராகவே கேப்டன்சி செய்திருந்தார். சூழலுக்கு ஏற்ப வியூகங்களை மாற்றாமல் எல்லா போட்டிகளுக்கும் ஒரே வியூகத்தை பிடித்து அப்ளை செய்து சொதப்பினார். உதாரணத்துக்கு, ஒரு போட்டியில் 8 வது ஓவரில் ரஷீத்தை வீச வைத்தால், அடுத்தடுத்த போட்டிகளிலும் 8 வது ஓவரிலேயே வீச வைப்பார். ஒரு ப்ளூ ப்ரிண்டை வைத்துக்கொண்டு அதைத்தாண்டி யோசிக்கமாட்டார். முதல் சீசன் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். இந்த சீசனில் அவர் ஒரு கேப்டனாக எவ்வளவு பரிணமித்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டியே ஆக வேண்டும். ஏனெனில், இந்திய அணியிலும் அவரை ஒரு கேப்டன் ஆப்சனாகப் பார்க்கிறார்கள். அதனால் கில் தன்னை கேப்டனாக நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் நல்ல வீரர்களை உள்ளடக்கிய திறன்மிகுந்த அணியாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த அணியிடம் ஒரு சீரான தன்மை இல்லை. அவர்களின் கேப்டன் சாம்சனை போலவே. கடந்த சீசனில் முதல் பாதி முழுவதும் வென்றுவிட்டு அடுத்த பாதியில் தொடர்ந்து தோற்று உருண்டு புரண்டு ப்ளே ஆப்ஸூக்குத் தகுதிப்பெற்றிருப்பார்கள். ஒரு நல்ல அணியை வைத்துக்கொண்டு இப்படி குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருப்பது வருத்தமான விஷயம். ஆக, சாம்சன் தன்னுடைய அணியை சீராக வெற்றிகளை நோக்கி அழைத்துச் செல்கிறாரா என்பதுதான் இந்த சீசனில் அவரிடம் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருக்கும். முதல் மூன்று போட்டிகளில் சாம்சனுக்கு பதில் ரியான் பராக்தான் கேப்டனாக இருக்கப்போகிறார். அந்தப் போட்டிகளின் ரிசல்ட்டை டேலி செய்வதும் சாம்சனின் வேலையாகத்தான் இருக்கும்.

சஞ்சு சாம்சன்

ரிஷப் பண்ட்

டெல்லி அணியிலிருந்து வெளியேறி ஏலத்தில் லக்னோ அணிக்கு சென்றிருக்கிறார் பண்ட். லக்னோ அணியின் நிர்வாகம் உடனடியாக ரிசல்ட்டை எதிர்பார்க்கக்கூடியவர்கள். ரிஷப் பண்ட்டை இத்தனை கோடி கொட்டி எடுத்திருக்கிறோம், அதற்காகவே அவர் முதல் சீசனிலேயே நமக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துவிடுவார் என லாஜிக்கே இல்லாமல் யோசிப்பவர்கள். அந்த முகாமில் மாட்டிக் கொண்டு ராகுல் பட்ட துன்பங்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரிஷப் பண்ட்டுக்கு அதுதான் பெரிய அழுத்தமாக இருக்கப்போகிறது. அணி நிர்வாகத்தின் அழுத்தத்தையும் தலையீட்டையும் வெற்றிகரமாக சமாளித்துவிட்டாலே கோப்பையை வென்றுவிடுவார்.

அஜிங்கியா ரஹானே

ரஹானே விஷயத்தில் கொல்கத்தா கொடுத்திருக்கும் சர்ப்ரைஸ் யாருமே எதிர்பார்க்காதது. வேறு எதாவது அணியில் இருந்திருந்தால் ரஹானே லெவனில் முதல் சாய்ஸாக இருந்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். கொல்கத்தா அணி நடப்பு சாம்பியன். ஆனால், சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது இல்லை. நடப்பு சாம்பியன் என்கிற அந்தஸ்தை தக்கவைக்க வேண்டுமெனில், மினிமம் கியாரண்டியாக ஒரு கேப்டன் கொல்கத்தாவுக்குத் தேவைப்பட்டார். அதற்காகத்தான் கொல்கத்தா அணி ரஹானேவை கேப்டன் ஆக்கியது. அணியின் இந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்காவது பூர்த்திசெய்தால் மட்டும்தான் ரஹானேவால் அடுத்தடுத்த சீசன்களுக்கும் அணியில் நீடிக்க முடியும்.

ஸ்ரேயாஷ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

கொல்கத்தா அணியில் தனக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லையென கூறி வெளியேறி பஞ்சாப் அணியில் ஐக்கியமாகியிருக்கிறார் ஸ்ரேயாஸ். கடந்த 17 சீசன்களில் அந்த அணிக்கு எத்தனை கேப்டன்கள், எத்தனை பயிற்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. 'Consistency' என்கிற வார்த்தையே அறியாத அணி. ஒருவேளை இந்த சீசனில் ஸ்ரேயாஸ் சொதப்பினால் அடுத்த சீசனில் அவர் கேப்டனாக இருப்பாரா என்பதே சந்தேகம்தான். இப்படியொரு அணியை ஸ்ரேயாஸ் சாம்பியன் ஆக்கிவிட்டால் பஞ்சாப் ரசிகர்கள் மட்டுமில்லை, அத்தனை அணியின் ரசிகர்களுமே ஸ்ரேயாஸை கொண்டாடுவார்கள்.

பேட் கம்மின்ஸ்

துவண்டு கிடந்த சன்ரைசர்ஸ் அணியை தட்டியெழுப்பி புது உத்வேகத்தோடு கிரிக்கெட் ஆட வைத்து ரன்னர் அப் ஆக்கியவர். என்ன ஆனாலும் பரவாயில்லை அட்டாக் செய்து ரிஸ்க் எடுத்து ஆடும் ஆட்டத்தை மட்டும் ஆட வேண்டும் என்பதே பேட் கம்மின்ஸின் திட்டம். ஆனால், அந்தத் திட்டம் லீக் போட்டிகளிலெல்லாம் நல்ல ரிசல்ட்டை கொடுத்து ப்ளே ஆபிஸில் சென்று காலை வாரினால் என்ன செய்வீர்கள்? கடந்த முறை அப்படித்தான் நடந்தது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக சவாலே அளிக்காமல் வீழ்ந்து போயிருந்தனர். அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட வேண்டும் அது கைகொடுக்காதபட்சத்தில், கம்மின்ஸ் அணியை எப்படி வழிநடத்துவார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

தோனி மாதிரியான ஜாம்பவானுக்கு பிறகு கேப்டன்சியை கையில் வாங்கிக்கொண்டு ஓடுவது எளிதான விஷயம் அல்ல. ஆனாலும் ருத்துராஜை வருங்காலத்துக்கான நம்பிக்கையாக அணி நிர்வாகம் பார்க்கையில் அவர் அதை நம்பிக்கையோடு செய்துதான் ஆக வேண்டும். தோனியின் வழிகாட்டுதல்கள் இருந்தாலும் முக்கியமான முடிவுகளை சுயமாக எடுக்கும் குணாதிசயத்தை ருத்துராஜ் கடந்த சீசனில் வெளிக்காட்டியிருந்தார். ஆனால், அதுமட்டும் போதாது. ரிசல்ட்டும் வேண்டும். கடந்த சீசனை நன்றாகத் தொடங்கியும் சீரற்ற ஆட்டத்தால் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் செல்ல முடியாமல் வெளியேறியது. வழிகாட்ட தோனி அணியில் இருக்கும்போதே ருத்துராஜ் தன்னை ஒரு வலுவான கேப்டனாக நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஹர்திக் பாண்ட்யா

கடந்த சீசனில் செய்யாத தவறுக்காக குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தார். அணி நிர்வாகம் செய்த வேலைகளுக்கு ரசிகர்கள் மொத்தமாக ஹர்திக்கின் மீது பாய்ந்திருந்தனர். ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்திலேயே அவருக்கு எதிராக அதிருப்திக் குரலை எழுப்பியிருந்தனர். மும்பை ஒரு அணியாகவே செட் ஆகாதது போல இருந்தது. மும்பை அணி புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தைத் தொட்டது. இந்த முறை ஹர்திக் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அதிருப்திக் குரல்களை ஆராவார ஆர்ப்பரிப்புகளாக மாற்ற வேண்டும். அதுதான் அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

ஹர்திக் பாண்ட்யா

அக்சர் படேல்

அக்சர் படேல் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போதே கேப்டன்சியும் கையில் கிடைத்திருக்கிறது. ஹேமங் பதானி அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியிருக்கிறார். அவர் பல லீக்குகளில் பல அணிகளை சாம்பியன் ஆக்கியவர். ஹேமங்கின் வழிகாட்டுதலில் பக்குவமான தலைமைப் பண்பை அக்சர் வெளிக்காட்டினால் இந்திய அணியிலுமே அந்தத் தலைமை இடத்தை நோக்கி அக்சர் நகரக்கூடும். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

CSK vs MI: `வத்திக்குச்சி பத்திக்கிச்சு' - சூரையாடிய கலீல் அகமத்; சோதனையில் ரோஹித் சர்மா

சென்னை vs மும்பை :ஐபிஎல் 18-வது சீசனின் 3வது போட்டி தலா ஐந்து முறை சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் த... மேலும் பார்க்க

SRH vs RR: `எந்த பாலையும் சாமிக்கு விடல'-கெத்து காட்டிய ஹைதராபாத்; போராடிய ராஜஸ்தான் பேட்டர்கள்

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. இன்றைய போட்டி ஐதராபாத் இராஜீவ் காந்தி மைதானத்தி... மேலும் பார்க்க

Ishan Kishan: 'எல்லாத்துக்கும் எங்க கேப்டன்தான் காரணம்' - செஞ்சுரிக்குப் பிறகு இஷன் கிஷன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனையும் அடிதடி பாணியில் தொடங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. முதலில் பேட் ... மேலும் பார்க்க

``நீங்கள் எங்களை உடைக்க முடியும், ஆனால் கொல்ல முடியாது'' - ஹர்திக்கிற்கு ஆதரவாகப் பேசிய க்ருணால்

நேற்றையப் (மார்ச் 22) போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் க்ருணால் பாண்டியா, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருபவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தி... மேலும் பார்க்க