செய்திகள் :

Iran: நாய்கள் நடைபயிற்சி செய்ய தடை விதிக்கும் ஈரான் - என்ன காரணம்?

post image

ஈரான் நாட்டின் பொது இடங்களில் நாய்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடையை மீறும் நாய் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை என்றாலும், மாறாக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை உத்தரவுகள் மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம், சமூக ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவெளியில் கிட்டத்தட்ட ஈரானின் 20 நகரங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாய்களுடன் நடப்பது பொதுமக்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். நாய்களுடன் நடப்பது பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கெர்மன்ஷா, இலம், ஹமதான், கெர்மன், போரூஜெர்ட், ரோபட் கரீம், லாவசனாட் மற்றும் கோலெஸ்தான் உள்ளிட்ட நகரங்களில் நாய்கள் பொதுவெளியில் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபராஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

சமூக ஒழுங்கைப் பராமரிப்பதையும், நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான ஷியா இஸ்லாத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூங்காக்கள், பொது இடங்களில் நாய்களை நடமாடுவதைக் கண்டாலோ அல்லது வாகனங்களில் அவற்றை சுமந்து செல்வதைக் கண்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஜூன் 6 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்டும் சேர்த்து அடக்கம்

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள உத்தர்சந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் பார்மர்(18). இவருக்கு ராயல் எல்பீல்டு புல்லட் பைக் என்றால் மிகவும் பிடிக்கும்.எங்குச் சென்றாலும் அவர் தனது புல்லட்... மேலும் பார்க்க

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயா... மேலும் பார்க்க

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க