தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
Japan Zoo: "ஆண்கள் தனியே வர அனுமதியில்லை..." - பாலியல் சீண்டல் புகார்களால் பூங்கா நிர்வாகம் அதிரடி
ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்று ஆண்கள் துணையில்லாமல் வருவதற்குத் தடைவிதித்துள்ளது.
இந்த விலங்கியல் பூங்காவுக்கு வருகை தரும் ஆண்கள் பெண் பார்வையாளர்களையும், பணியாளர்களையும், பாலியல் ரீதியாகச் சீண்டும் சம்பவங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜப்பானில் உள்ள தோச்சிகி என்ற மாகாணத்தில் கடந்த மார்ச் 2024ல் திறக்கப்பட்டுள்ளது ஹீலிங் பெவிலியன் பூங்கா. இங்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளைக் கொஞ்சவும், தடவிக் கொடுக்கவும், உணவளிக்கவும், விளையாடவும் முடியும்.
க்யூட்டான முயல்கள், ஆடுகள், நீர்நாய்கள் (Otters) மற்றும் பூனைகள் இங்கு உள்ளன. இங்குள்ள நாய் பூங்காவுக்குப் பார்வையாளர்கள் தங்களது செல்ல பிராணியையும் அழைத்து வரலாம்.
மிசா மாமா என்ற பெண்தான் இந்த பூங்காவின் உரிமையாளர். இவரது எக்ஸ் கணக்கில் ஜனவரி 26ம் தேதி வெளியிட்ட பதிவில், 'இனி ஆண்கள் மட்டும் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என அறிவித்துள்ளார்.
"நான் அகங்காரத்துடனோ, தவறாகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. பலர் அபாயகரமான சிந்தனையுடன் வருகின்றனர். இதனால் மன உளைச்சல்தான் மிஞ்சுகிறது. அவர்களது செயலால், என் மனதில் வலியை உணர்கிறேன். நாங்கள் ஒன்றும் மது விடுதி வைத்திருக்கவில்லை. எனவே நீங்கள் உண்மையாகவே விலங்குகளுடன் நேரம் செலவழிக்க விரும்பினால் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்துவாருங்கள்" என அவர் கூறியுள்ளார்.
"ஆண்கள் நிச்சயமாகக் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வரவேண்டும்" என எழுதப்பட்ட பதாகையை வெளியே வைத்துள்ளனர்.
மேலும் மிசா, "என்னால் முடிந்தால் தவறாக நடந்துகொள்பவர்களை மட்டும் நிறுத்தியிருப்பேன். ஆனால் ஒரு பெண்ணாக இருந்து நான் இந்த Zoo-வை நடத்துவதால் பழிவாங்கும் எண்ணத்துடன் பலரும் வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play