கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகை
இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடைய மகன் ஜேசன் சஞ்சய்.
`லைகா நிறுவனம்' தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்கவிருக்கிறார், ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான தகவலைச் சில மாதங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது.
தற்போது இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது எனச் சமூக வலைத்தளப் பக்கங்களில் பேசப்பட்டாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து படப்பிடிப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில், பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்ரவரி 25) சேலம் விமான நிலையத்திற்கு வந்திறங்கியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். அரசியல் வட்டத்தைத் தாண்டி சினிமா வட்டத்திலிருந்து விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய் ஆகியோரும் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர். ஜி.கே. மணியின் மகனான ஜி.கே.எம். தமிழ்குமரன்தான் லைகா தயாரிப்பு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel