கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Rajini Kanth: ரஜினி திருமண நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு; வேலூர் ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்
தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த 26-2-1981 அன்று லதாவைக் கரம் பிடித்த ரஜினிகாந்த் நாளை (புதன்கிழமை) தனது 44-ம் ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி, அவரின் நற்பணி மன்றத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பிலும் வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தங்கத்தேர் இழுத்துச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி தலைமை தாங்கி, இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

வேலூர், சோளிங்கர் பகுதிகளைச் சேர்ந்த நற்பணி மன்ற நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது, ரஜினி - லதா சேர்ந்திருக்கும் புகைப்பட பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர். பக்தி பாடல்களைப் பாடிக்கொண்டே தேரை மீண்டும் கொண்டு வந்து நிலை நிறுத்தினர். முன்னதாக, ரஜினி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டதோடு, நற்பணி மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவிக்கும் கோயில் தரும ஸ்தாபனம் சார்பாகப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயிலுக்கு வெளியே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புடவை, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றைத் தாம்பூலத் தட்டில் வைத்து வழங்கினார் மாவட்டச் செயலாளர் என்.ரவி.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel