மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
Keerthi Suresh: கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் - நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் மாப்பிள்ளை ஆகிறார்!
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என கோலிவுட்டில் தகவல் பரபரக்கிறது.
’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவின் முன்னாள் ஹீரோயின் மேனகா சுரேஷின் மகள் இவர். தொடர்ந்து ரஜினி முருகன், பைரவா, தொடரி, ரெமோ, சர்க்கார், மாமன்னன் என பல ஹிட் படங்களில் அதுவும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இப்போதும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் பெண்களை முன்னிலைப்படுத்தும் பல படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்கிற தகவல்கள் கடந்த சில தினங்களாகவே வெளியாகி வந்து கொண்டிருந்தன.
தகவலை உறுதி செய்ய கீர்த்தியின் பெற்றோர் தரப்பில் பேசினோம்.
‘’ஆமாங்க, நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இந்த சந்தோஷமான தகவலை சொல்றதுல ரொம்பவே ஹேப்பியா இருக்கு. கீர்த்தியின் கல்யாணம் உறுதியாகி இருக்கு. அவளுடைய நீண்ட நாள் நண்பர் ஆண்டனிதான் மாப்பிள்ளை. டிசம்பரில் திருமணம் நடக்கவிருக்குது. தேதி, இடம் குறித்த தகவலை சீக்கிரத்துலயே அறிவிக்கிறோம்’’ என்றார்கள் அவர்கள்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டில் தற்போது துபாயில் வசித்து வருகிறாராம்.
தற்போது ரிவால்டர் ரீட்டா, கன்னி வெடி என சில படங்கள் கைவசம் வைத்திருக்கும் கீர்த்தி, திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருமணம் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடக்கவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...