Kerala: 2 ரூபாய் மருத்துவர் ரைரு கோபால் மறைவு; இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்; தலைவர்கள் இரங்கல்
கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ரைரு கோபால் நேற்று (ஆகஸ்ட் 3) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 80.
கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

நோயாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த போது, அங்கு காணப்பட்ட கொடுமையான நிலைமையை கண்டு, இந்த மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். கூலி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் நேற்று உயிரிழந்த அவரின் இறுதிசடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர் . ஆடம்பர வாழ்க்கையை துறந்து ஏழைகளுக்காகவே தனது வாழ்நாள் முழவதையும் அர்ப்பணித்த அவரது மறைவு கண்ணூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.