செய்திகள் :

kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? - இந்த மலை ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்?

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவியது. இதற்கிடையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் மோதல்போக்கை கைவிட்டன. ஆனால் பாகிஸ்தான் அரசு மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது.

இந்த நிலையில்தான் நேற்று முப்படைகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினர். அப்போது செய்தியாளர்கள் பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் இருக்கும் பகுதியாக கருதப்படும் கிரானா மலையின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி உண்மையா? எனக் கேள்வி எழுப்பினர்.

modi
modi

கிரானா மலை:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோடா மாவட்டத்தில் உள்ளது கிரானா மலை. இந்த மலையின் குகைகளில்தான் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. இந்த மலைகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வைரலானது.

கிரானா மலை பாகிஸ்தானுக்கு ஏன் முக்கியம்?

கிரானா மலை பகுதியின் ஆன்லைன் வரைபடத்தைப் பார்த்தால், மலைகளின் பழுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். அந்த மலையின் குகைகளில்தான் அணு ஆயுதங்கள் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், 'கிரானா மலை நிலத்தடி அணுசக்தி உள்கட்டமைப்புக்கு பெயர் பெற்றப் பகுதி. மிகவும் வலுவூட்டப்பட்ட இராணுவ மண்டலம்' என ஓய்வு பெற்ற கர்னல் விநாயக் பட், நவம்பர் 2017-ல் தி பிரிண்ட் செய்திக்கு எழுதியிருக்கிறார்.

மார்ஷல் ஏ.கே. பாரதி
மார்ஷல் ஏ.கே. பாரதி

கிட்டத்தட்ட 68 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய 39 கி.மீ சுற்றளவால் சூழப்பட்ட, கிரானா மலை பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, பாகிஸ்தானின் முக்கியமான 11 இராணுவ தளங்கள் தாக்கப்பட்டது. அதில் முக்கியமானது ரஃபிகி, முரித், நூர் கான், ரஹிம் யார் கான், சுக்கூர், சுனியன், பஸ்ரூர், சியால்கோட் ஆகிய விமானத் தளங்கள் குறிப்பிடதக்கவை.

அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை இந்தியா முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினாலும், பாகிஸ்தானிடம் அத்தகைய எந்தவொரு கட்டுப்பாட்டுக் கொள்கையும் இல்லை.

இராணுவத்தின் பதில்:

எனவே, கிரானா மலைக்கு அருகில் இருக்கும் நூர் கான், சர்கோதா விமான தளங்களின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை செயல்படுத்தும் முக்கிய தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் கிரானா மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்றக் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, ``கிரானா மலைகளில் சில அணு ஆயுத நிறுவல்கள் உள்ளன என்று எங்களிடம் கூறியதற்கு நன்றி. கிரானா மலையில் என்ன இருக்கிறது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கிரனா மலைகளைத் தாக்கவில்லை.'' எனத் தெரிவித்திருக்கிறார்.

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

"சிந்து நதி ஒப்பந்தம்; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Modi: `அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்; இந்தியா மீது கைவைத்தால்...' - பஞ்சாப்பில் மோடி உரை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

"வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்" - முதல்வருக்கு இபிஎஸ் பதில்

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முதல்வர் ஸ்டாலின் `டு' விஜய்... தீர்ப்பை வரவேற்கும் அரசியல் தலைவர்கள்!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசைவார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மி... மேலும் பார்க்க

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில... மேலும் பார்க்க