செய்திகள் :

Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன்

post image
நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.

கல்யாண வாழ்க்கையில் நுழையும் மணிகண்டன், குடும்பத்தை நடத்த என்னமாதிரியான பிரச்னைகளை, சவால்களை எல்லாம் சந்திக்கிறார் என்பதை ஜாலியாகச் சொல்லும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா நேற்று (ஜன 31) நடைபெற்றது. அதில், இப்படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான பிரசன்னா பாலசந்திரன், தனது சினிமா பயணம் குறித்தும் யூடியூப் குறித்தும் பேசியிருக்கிறார்.

குடும்பஸ்தன்
குடும்பஸ்தன்

"'நக்கலைட்ஸ்' யூடியூப் சேனல்தான் எங்களுக்கு வாழ்க்கைக் கொடுத்தது. எங்களுக்கு ஆதரவு தந்த தமிழ்நாட்டு மக்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எங்களோட முதல் வீடியோவோட பட்ஜெட் ரூ.250. வாகனத்துக்கான பெட்ரோல் செலவு, டீ செலவுக்குமே அது சரியா போயிடும். ஒரு ஆண்டு அப்படித்தான் போச்சு. யாருக்கும் சம்பளமே கிடையாது. அப்போ எங்ககூட இருந்து உழைச்ச எல்லாருக்குமே இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்.

பிரசன்னா பாலசந்திரன்
பிரசன்னா பாலசந்திரன்

சினிமாக்குள்ள வர நிறையக் கஷ்டப்பட்டோம். சினிமா பத்தி நிறையக் கட்டுக்கதைகள் சொல்லி வைச்சிருக்காங்க. அதுல முக்கியமானது சினிமா வேற, யூடியூப் வேற அப்டினு சொல்றது. யூடியூப்ல தான் சினிமாக்கான பயிற்சியே எடுத்தோம். அதனால யூடியூப் வேற, சினிமா வேறனு வேறுபடுத்தி பேசாதீங்க. சினிமால இருக்க சுதந்திரம்கூட, யூடியூப்ல இருக்காது. யூடியூப்ல 10 நிமிஷத்துல கதையச் சொல்லி, பார்வையாளர்கள என்கேஜ் பண்ணி வைக்கணும். சினிமாலகூட 200 ரூபா கொடுத்து படம் நல்லா இல்லைனாலும் பல்ல கடிச்சுட்டு உட்கார்ந்து பார்ப்பாங்க. ஆனால், யூடியூப்ல வீடியோ நல்ல இல்லைனா, அடுத்த வீடியோ பார்க்க போயிடுவாங்க.

யூடியூப்பில் சினிமா கனவுடன் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் நிறையபேர் இருக்காங்க. அந்த யூடியூப்பை, யூடியூப்பர்களைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி' - சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் - ஒரு பார்வை

சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.இப்படத்திற்கு `பராசக்தி' என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான `டான் பிக்சர்ஸ்' . படத்தில் இது... மேலும் பார்க்க

'மதகஜராஜா' வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் பழைய படங்கள்; ஜி.தனஞ்செயன் பட்டியலிடும் படங்கள் என்னென்ன?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த 'மதகஜராஜா' படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புது டிரெண்ட்டை துவக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் ப... மேலும் பார்க்க

Kishen das: 'முதல் நீ முடிவும் நீ...' - பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!

`முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நடிகர் கிஷன் தாஸ்.இதைத் தாண்டி அவர் `நேர்கொண்ட பார்வை', `சிங்க்', `சிங்கப்பூர் சலூன்' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடி... மேலும் பார்க்க

En Iniya Pon Nilave: `அந்தப் பாடலுக்கான உரிமை இளையராஜாவுக்கு இல்லை'- டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இளையராஜாவின் இசையில் உருவான `மூடுபனி' திரைப்படத்தின் `என் இனிய பொன் நிலாவே' பாடலை தற்போது யுவன் ஷங்கர் ராஜா ரி-கிரியேட் செய்திருக்கிறார்.இப்பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். பாடலாசிரியர் பா.விஜய் இயக... மேலும் பார்க்க