ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள்...
Lokah Chapter 1: `என்னைப் பற்றி நானே கண்டுபிடிக்க' - பயிற்சி வீடியோவை வெளியிட்ட கல்யாணி பிரியதர்ஷன்!
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.
இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருந்தது. தற்போது ரூ. 200 கோடிக்கு மேலான வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.
கள்ளியன்காட்டு நீலியாகத் தொடங்கியிருக்கும் இதன் முதல் அத்தியாயத்தின் இறுதியில் துல்கர் சல்மான், டொவினோவின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த பாகத்திற்கான தொடர்ச்சிக் கதைகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கின்றன. மூத்தோனாக மம்மூட்டி நடிப்பதாகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
இதன் இரண்டாம் அத்தியாயம் டொவினோவின் கதையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 'Lokah Chapter 2' பற்றிய அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த ' Lokah Chapter 1' திரைப்படம் 'Jiohotstar' ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 31 தேதி) வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் சந்திரா கேரக்டரில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தன் எக்ஸ் பக்கத்தில், ``சில பயணங்கள் உங்களை மாற்றிவிடும். சந்திராவுக்கான பயிற்சியை பயிற்சியாளர் ஜோபிலாலுடன் மேற்கொண்டபோது, நான் நம்பியதை விட மிகவும் வலிமையானவள் நான் என்பதைக் காட்டியது.
என்னைப் பற்றி நானே கண்டுபிடிப்பதற்கு உதவிய பயிற்சியாளருக்கு நன்றி. இந்தக் கதைக்கு உயிர் கொடுக்க உழைத்த அனைவருக்கும் நன்றி. இன்றிரவு நள்ளிரவு முதல், ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்திரா உங்கள் வீடுகளுக்கு வருகிறார்..." எனப் பதிவிட்டிருக்கிறார்.

















.jpg)


