செய்திகள் :

Lotus Seed: தாமரை விதையை எப்படி சாப்பிடுவது; அதன் மருத்துவ பலன்கள் என்னென்ன?

post image

தேசிய மலரான தாமரை இந்தியாவில்தான் அதிகம் பயிராகிறது என்றாலும், தற்போது தெற்காசியக்கண்டத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தாமரை விதைகளின் மருத்துவக் குணங்கள் ஆச்சர்யமூட்டக் கூடியவை. பூவின் அடிப் பகுதியில் விதைகள் இருக்கும். சீனா மற்றும் கம்போடியாவில் தான் இவை அதிகமாகக் கிடைக்கின்றன.

சீன மருத்துவத்தில் இந்த விதைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவாகவும், ஆரோக்கியமான உணவுப் பொருள்களாகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் கொண்டாடப்படுகின்றன.

நம்மில் பெரும்பாலானோர் இவற்றின் ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் எந்தளவுக்கு இவற்றை உண்ணலாம் என்பது பற்றியும் தெரியாமல் இருக்கின்றோம் என்பதே உண்மை. அவை குறித்து இங்கே சொல்கிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல்.

lotus seeds
lotus seeds

100 கிராம் தாமரை விதைகளில் சுமார் 350 கலோரிகள், 63-68 கிராம் கார்போஹைட்ரேட், 17-18 கிராம் புரதம், 1.9-2.5 கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் (சுமார் 13 சதவிகிதம்) மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.

நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

lotus seeds
lotus seeds

நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.

தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

Anti aging
Anti aging

இவற்றில் செல் முதிர்ச்சி அடைவதைத் தாமதப்படுத்தும் என்சைம்கள் உள்ளன. மேலும், சேதமடைந்த புரதங்களுக்கு இந்த என்சைம்களை அளித்து உதவவும் செய்கின்றன. இதன் காரணமாக, பல அழகு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களில் தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களைச் சேர்க்கின்றன.

இவை மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. அமைதியின்மை மற்றும் பதற்றத்துடன்கூடிய மனஅழுத்தம் ஆகியவற்றுக்குப் பாரம்பர்ய சிகிச்சைகளில் தாமரை விதை பயன்படுத்தப் படுகிறது.

Lotus seeds
Lotus seeds

தற்போது எல்லா மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் உலர்ந்த தாமரை விதைகள் கிடைக்கின்றன.அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சூப்புகள், சாலட்டுகள் அல்லது மற்ற உணவுகளில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளலாம். உலர்ந்த தாமரை விதைகளை பாப்கார்னைப்போல வறுத்துச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

OPS: ``மதுரையில் மாநாடு; அங்கே ஒரு முக்கிய முடிவு!'' - என்ன சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.OPSஅதில் பேசிய ஓ.பி.எஸ், "அரசியல்ரீதியான கட்சிகளுக்... மேலும் பார்க்க

TVK Vijay: ``மதுரையில் மாநாடு நடத்த நினைக்கிறார்கள்; ஆனால்..'' - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

மதுரையில் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டம் முழுக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முளைகட்டிய பயறு, வேகவைத்தது... எது பெஸ்ட்? எப்படி சாப்பிடணும்?

Doctor Vikatan:முளைகட்டிய பயறு.... வேகவைத்த பயறு... இரண்டில் எதில் சத்துகள் அதிகம்.... முளைகட்டிய பயறு சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வருமா... எந்தெந்தப் பயறுகளை முளைகட்டிச் சாப்பிடலாம்?பதில் சொல்கிறார்... மேலும் பார்க்க

இளமையான சருமம் முதல் மூட்டுகளுக்கு பலம் வரை.. எல்லாம் தரும் எலும்பு சூப்!

எப்போதாவது சாப்பிட்டாலும், அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது சூப். இன்றைக்கு உணவகங்களுக்குப் போனாலோ, உடல்நலமின்றி இருக்கும்போது டாக்டர்கள் பரிந்துரைத்தாலோதான் சூப்பை அருந்துகிறோம். மற்றபடி வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க