செய்திகள் :

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

post image

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உணவு வகைகளுக்கு முக்கியமான ஸைடிஸ்களில் ஒன்று மையோனைஸ். சமைக்கப்படாத முட்டை, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் உணவு மையோனைஸ். அதில் பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Mayonnaise
Mayonnaise

இந்த நிலையில், முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது, முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ``உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mayonnaise
Mayonnaise

ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? - உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பே... மேலும் பார்க்க

Health: நாம் ஏன் தினமும் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்? நிபுணர் சொல்லும் விளக்கம் இதான்!

சரிவிகித உணவு என்பது மனித உடலுக்குத் தேவையான அனைத்து அடிப்படைச் சத்துக்களையும் கொடுப்பதாகும். சரிவிகித உணவு மற்றும் அதன் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாததால் வரும் விளைவுகள் குறித்... மேலும் பார்க்க

Health: அடிக்கடி கிரில்டு சிக்கன் சாப்பிடுறீங்களா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?

அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும்.தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில... மேலும் பார்க்க

Helmet: உங்களுக்கு ஏற்றபடி ஹெல்மெட் வாங்குவது முதல் பராமரிப்பு வரை..!

போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்... மேலும் பார்க்க

`கார் பயணங்களில் 'இந்தத்' தண்ணீர் வேண்டவே வேண்டாம்! மீறினால்..' -எச்சரிக்கும் மருத்துவர்

ஆபீஸ் செல்வது, வெளியூர் பயணம், லாங் டிரைவ் என காரில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?தாகம் அடிக்கும், தண்ணீர் தேவைப்படும் என உங்கள் கார் டிரிப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்பவரா நீங... மேலும் பார்க்க