செய்திகள் :

Meera Mithun: தலைமறைவான நடிகை; தாயார் கொடுத்த மனு- மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

post image

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், 'எட்டு தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

அப்படி 2021ஆம் ஆண்டு சினிமா துறையில் பட்டியலின மக்களின் முன்னேற்றம் குறித்து அவதூறு கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தது.

பின்னர், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். அவர் டெல்லியில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மீரா மிதுனின் தாயார், தனது மகளைக் காணவில்லை என்றும், அவரது இருப்பிடம் தெரியவில்லை என்றும் கூறி மகளைக் கண்டுபிடித்து தரக் கோரி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் மீரா மிதுனை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக... மேலும் பார்க்க

அகரம் அறக்கட்டளை: "இந்த முயற்சியில் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டுவிழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டார்.அந்த நிகழ்வையும் சூர்யாவை வாழ்த்தும் வகையில், "நாம் இருவரும் நே... மேலும் பார்க்க

'ஹீரோயினுக்கு நான் சொல்றவங்களைக் கமிட் செய்யுங்க’னு சொன்னார் ஹெச்.ராஜா!' - 'கந்தன் மலை' இயக்குநர்

முதன்முதலாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா.இவர் நடிக்கும் 'கந்தன் மலை' படத்தின் போஸ்டர் வெளியாகயிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் வீர ம... மேலும் பார்க்க

71-வது தேசிய விருது: ``என் கேள்விகளுக்கு விருது குழு பதிலளிக்க வேண்டும்'' - நடிகை ஊர்வசி விமர்சனம்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், விக்ராந்த மெஸ்ஸி, சிறந்த நடிகை ராணி முகர்ஜி, சிறந்த துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகர் வ... மேலும் பார்க்க

Rajini: "லோகேஷ் கனகராஜ் எங்க ஊர் ராஜமௌலி; நானே வில்லனாக நடிக்க ஆசைப்பட்டேன்!'' - ரஜினிகாந்த்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ... மேலும் பார்க்க

'இந்த திட்டம் பல உயிர்களைக் காக்கும்'- 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிய சமீரா ரெட்டி

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிப் நடிகை சமீரா ரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், "8 -9 வருடங்க... மேலும் பார்க்க