செய்திகள் :

Mohanlal: "16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" - மோகன்லாலைக் கௌரவித்த இந்திய ராணுவம்

post image

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது.

மலையாள சினிமாவிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் மோகன்லால். அதே நேரம், மே 2009-லிருந்து இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் வகிக்கிறார்.

ஆகஸ்ட் 2024-ல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.

மோகன்லால்
மோகன்லால்

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியைச் நேற்று டெல்லியில் சந்தித்தார்.

அப்போது ராணுவத் தலைமைத் தளபதி, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு 7 தளபதிகள் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். 

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், ``ராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது ஒரு சிறந்த அங்கீகாரம்.

நடிகர் மோகன்லாலை கௌரவித்த இந்திய இராணுவம்
நடிகர் மோகன்லாலை கௌரவித்த இந்திய இராணுவம்

இந்தப் பாராட்டுக்கு தாதாசாகேப் பால்கே விருதும் ஒரு காரணம். கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக, TA பட்டாலியனில் செயல்திறனை எப்படி அதிகரிப்பது, நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் உரையாடல்களை நடத்தினோம்.

இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்ட படங்களில் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

சென்னை: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; பின்னணி என்ன?

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார் துல்கர்... மேலும் பார்க்க

``20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றபோது..." - அடூர் கோபாலகிருஷ்ணன்

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது. Mohan Lal at... மேலும் பார்க்க

"சினிமா கனவுடன் மெட்ராஸ் போனேன்; ஆனால்" - மோகன் லால் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

இந்த ஆண்டு 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன் லால் தாதா சாகேப் விருதைப் பெற்றார். இதைக் கொண்டாடும் விதமாக கேரள அரசு, திருவனந்தபுரத்தில் மாபெரும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. ... மேலும் பார்க்க

Manju Warrier: ``உச்சத்தில சூரியனா நின்ன தேவத நீ" - மஞ்சுவாரியார் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

நடிகை மஞ்சுவாரியார் Preethi Asrani: ``அலாரம் உந்தன் love ஆகி போச்சே'' - ப்ரீத்தி அஸ்ராணி | Photo Album மேலும் பார்க்க

Mammootty: 'கேமரா என்னை அழைக்கிறது'- மீண்டும் படப்பிடிக்குத் திரும்பும் மம்மூட்டி நெகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு உடல் நலமில்லை என்றச் செய்திகள் வெளியானது.அதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் கலந்துக... மேலும் பார்க்க

Lokah Chapter 2: "அடுத்து டொவினோ கதை; 389 சகோதரர்களும், சாத்தன் கூட்டமும்"- வெளியான அப்டேட்

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நட... மேலும் பார்க்க