செய்திகள் :

Netherlands: 15 ஆண்டுகளாக முடியாத கொலை வழக்கு; குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3D விடியோ வெளியிட்ட போலீஸ்

post image

ஹங்கேரியாவின் நைரெகிஹாசாவில் (Nyíregyháza) பிறந்தவர் பெர்னாடெட் சாபோ. சிறுவயது முதல் வறுமையில் வாடிய குடும்பம், நெதர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது. ஒருகட்டத்தில் வறுமையின் காரணமாக பெர்னாடெட் சாபோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்.

பெர்னாடெட் சாபோ

2009 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும், பெர்னாடெட் சாபோவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால், அவரின் தோழிகள் பெர்னாடெட் சாபோவைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் பெர்னாடெட் சாபோ. அதைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலையாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல கோணங்களில் விசாரித்தும் உண்மை வெளிவரவில்லை. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, "கொலை செய்யப்பட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர்கள் அதை வெளியே கூறவில்லை. யாருக்காக இதைச் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதனால்தான் புதிய வழியில் இந்த வழக்கை மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டு ஹாலோகிராம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அதில், 19 வயதான பெர்னாடெட் சாபோவின் உருவம் 3D-யில் தெரிகிறது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெர்னாடெட் சாபோ, மக்கள் வருவதைப் பார்த்து எழுந்து வருகிறார். அப்போது அவருக்கு முன்னாள் இருக்கும் கண்ணாடியில் Help என வருகிறது. அந்த கண்ணாடி அறை முழுவதும் பெர்னாடெட் சாபோவின் புகைப்படங்கள், அவர் கொலை தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது நெதர்லாந்து காவல்துறையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

வழக்கறிஞர் கொலையில் கூலி பாக்கி; உ.பி போலீஸில் புகாரளித்த கூலிப்படைத் தலைவன்!

உத்தரப்பிரதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கூலிப்படைத் தலைவன், கொலைக்கான மீதி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு, மீரட் நகரில் உள்ள காவல்... மேலும் பார்க்க

சென்னை: 45 நாள்களேயான ஆண் குழந்தை கடத்தல் - அரசு உதவி தொகை வாங்கி தருவதாகக் கூறி கடத்திய பெண்!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்ததோடு ஆண் குழந்தையை கண்ணு... மேலும் பார்க்க

சகோதரியின் காதலனுக்கு மது விருந்து... துண்டு துண்டாக சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!

வேறு மதத்தை சேர்ந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ குடும்பத்தில் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றனர். மும்பையில் அவ்வாறு வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்ப... மேலும் பார்க்க

சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?

தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் பெண்களிடம் பாலியல் சீண்டல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர்!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ். கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் குடிபோதையில் அருகிலுள்ள ஒரு வீட்டின் சுவர்... மேலும் பார்க்க

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க