ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
New Delhi: 'கும்பமேளா கூட்டநெரிசல்; புதுடெல்லி ரயில் நிலையத்தில் பறிபோன 18 உயிர்கள்'- என்ன நடந்தது?
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்ல வேண்டி புதுடெல்லி இரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த வேதனையான சம்பவம் நடந்திருக்கிறது.

கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா முழுவதுமிருந்து பல தரப்பட்ட மக்கள் உத்தரபிரதேசம் நோக்கி சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே பல பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நேற்று இரவு புதுடெல்லி இரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசலால் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
நேற்று இரவு 10 மணியளவில் புதுடெல்லி இரயில் நிலையத்திலிருந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜூக்கு செல்லும் இரயிலை பிடிக்க எக்கச்சக்கமான மக்கள் இரயில் நிலையத்துக்கு வந்திருக்கின்றனர். இந்த இரயில் 14 வது ப்ளாட்பார்மில் வரவிருந்திருக்கிறது. அதேமாதிரி, 12 மற்றும் 13 வது ப்ளாட்பார்ம்களில் வர வேண்டிய ஸ்வாதந்ரத்தா எக்ஸ்பிரஸூம் புபனேஷ்வர் ராஜதானி ரயிலின் வருகையும் தாமதமாகியிருக்கிறது.
பிரயாக்ராஜ் ரயிலை பிடிக்கக் கூடிய கூட்டத்தோடு அந்த இரயில்களுக்கு கூடிய கூட்டமும் இணையவே நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 14 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

'புதுடெல்லி இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை எண்ணி மனமுடைந்திருக்கிறேன். அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நோக்கியே என்னுடைய எண்ணமெல்லாம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்குமான உதவிகளையும் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.' என பிரதமர் மோடி பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs