செய்திகள் :

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்

post image

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றிய அமித் ஷா, ``நேற்று ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் சுலைமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனார்.

அமித் ஷா
அமித் ஷா

சுலைமான் லஷ்கர் தளபதி என்றும், 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் நம் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். மற்ற இருவரும் "ஏ-லிஸ்ட்" பயங்கரவாதிகள். நமது குடிமக்களைக் கொன்றவர்களும் கொல்லப்பட்டனர் என்பதை நாடாளுமன்றத்திற்கும் நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

அதைத் தொடர்ந்து இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களை பட்டியலிடிருக்கிறது. அதில்,

  • AK 47 - 9 (1 சேதமடைந்தது)

  • M4 துப்பாக்கிக்கான தோட்டாக்கள் - 371 

  • காலியான கார்ட்ரிட்ஜ் (தோட்டா இருக்கும் பைகள்) - 7

  • கைக்குண்டு - 3

  • பை - 3

  • சோலார் சார்ஜர் 28 வாட் - 1

  • பைகள் - 2

  • கோப்ரோ ஹார்னஸ் (கேமராவை பொருத்தும் தோள்பட்டை பை)- 1

தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள்
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள்
  • மொபைல் சார்ஜர் - 3

  • காஸ் - 1

  • ஆயுதங்களை சுத்தம் செய்யும் பிரஷ்- 3

  • பாராசிட்டமால் 650 - 22 மாத்திரைகள்

  • நெக்ஸோபில் டிஎஸ்ஆர் - 30 மாத்திரைகள்

  • ஊசி, நூலுடன் ரோல் - 1

  • சிகரெட் லைட்டர்கள் - 4

  • பவர் பேங்க் (சுவிஸ் மிலிட்டரி என்று எழுதப்பட்டுள்ளது) - 1

  • ஆதார் அட்டை (முகமது அஷ்ரஃப் கோஜர் C/o முகமது சாதிக் R/o அகல் கங்கன் கந்தர்பால்)

  • ஆதார் அட்டை (குலாம் மொஹிடின் R/o காசோலை தாரா ஸ்ரீநகர்)

  • நகம் வெட்டி - 1

  • ரூ.3,000 ரொக்கம்.... முன்னதாக, அமித் ஷா பேசுகையில், பாகிஸ்தானில் செய்யப்பட்ட சாக்லேட்டும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

'தி கேரளா ஸ்டோரிஸ்' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். ``கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்... மேலும் பார்க்க

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க