போல்ட் 4 விக்கெட்டுகள், கிளாசன் அதிரடியால் மீண்ட சன்ரைசர்ஸ்: மும்பைக்கு 144 ரன்க...
Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரை விட்டு அவசரமாக வெளியேறும் சுற்றுலா பயணிகள்; உதவும் உமர் அப்துல்லா
பகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பின், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் வேக வேகமாக சொந்த மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுக்குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில்...
"நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எங்களது விருந்தினர்கள் பகல்காமில் இருந்து வெளியேறுவதை பார்க்க மனவேதனையாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், 'மக்கள் ஏன் வெளியேற நினைக்கிறார்கள்?' என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

கூடுதல் விமானங்களை இயக்க டி.ஜி.சி.ஏ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வரும் நிலையில், ஶ்ரீநகர் மற்றும் ஜம்முவிற்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒரே திசையிலான போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வந்துள்ள வாகனங்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே போக்குவரத்தை எளிதாக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
சில இடங்களில் சாலைகள் இன்னும் நிலையற்றத்தன்மை உடன் இருக்கின்றன. இவைகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒழங்கமைப்பட்ட முறையில் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்ற கடுமையாக உழைத்து வருகிறோம்.
தற்போது வாகனங்களை எந்த கட்டுபாடுகளும் இன்றி இயக்க அனுமதிக்க முடியாது. அதனால், அனைவரும் எங்களுடன் ஒத்துழைப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
It’s heartbreaking to see the exodus of our guests from the valley after yesterday’s tragic terror attack in Pahalgam but at the same time we totally understand why people would want to leave. While DGCA & the Ministry of Civil Aviation are working to organise extra flights,… pic.twitter.com/5O3i5U1rBh
— Omar Abdullah (@OmarAbdullah) April 23, 2025