ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!
Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்?
சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக `பராசக்தி' உருவாகி வருகிறது . இப்படத்தை `டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை,காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் உட்பட இலங்கையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர்கள் பலரின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து கசிந்த புகைப்படங்கள் மூலமாக இப்படத்தில் தற்போது மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடித்து வருவது தெரிய வந்திருக்கிறது. இலங்கையில் நடக்கும் படப்பிடிப்பில் இவருடைய காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம். பேசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் `பிராவின்கூடு ஷாப்பு', `பொன்மேன்' ஆகிய மலையாள திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் `பொன்மேன்' திரைப்படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
மலையாள சினிமாவின் பேவரைட் நட்சத்திரங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அதிரடி பெர்பாமர்களாக மலையாள சினிமாவில் முன்னிலை வகிக்கும் செளபின் சாஹிர், ஜோஜு ஜார்ஜ், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் `கூலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய கால் தடத்தைப் பதிக்கவிருக்கிறார் செளபின் சாஹிர். `ஜகமே தந்திரம்' படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `ரெட்ரோ' படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார். இதனை தாண்டி விக்ரமுடன் `வீர தீர சூரன்' படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். `வீர தீர சூரன்' இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...