Plane crash - Live Updates: விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்... 42 பேர் பலி; புதின் இரங்கல்
அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய விமானம்... 42 பேர் பலி; புதின் இரங்கல்
கஜகஸ்தானில் விமானம் அவசரமாகத் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில், அஜர்பைஜான் தலைநகரிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு 62 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் என 67 பேருடன் புறப்பட்ட அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜே2-8243 விமானம், க்ரோஸ்னியில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் திருப்பிவிடப்பட்டது. இதனால், அவசரமாக கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. இதுவரையில், 42 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 25 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தைத்தொடர்ந்து, அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் புதின் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.