சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
Porsche: தமனுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த 2 கோடி ரூபாய் கார்; இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?
தமிழில் மட்டுமல்ல; தெலுங்கிலும் இப்படித்தான் சந்தோஷத்தைக் கொண்டாடுகிறார்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள். லேட்டஸ்ட்டாக வெளிவந்து, 5 நாட்களில் 115 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்த ‛டாக்கு மஹாராஜ்’ படத்தின் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கு ஒரு காஸ்ட்லியான போர்ஷே காரைப் பரிசளித்துள்ளார்.

கோவிட் தொற்றுகாலத்தில் இருந்து பாலகிருஷ்ணாவின் அகாந்தா, வீரசிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, என்று பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தமன். ‛அகாந்தா 2’ படத்துக்கும் தமன்தான் இசையமைப்பாளர். இந்நிலையில்தான் போர்ஷே கேய்ன் எனும் காரைப் பரிசளித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
லெக்ஸஸ், போர்ஷே, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்று செலிபிரிட்டிகளுக்காகவே உருவான கார்தான் போர்ஷே நிறுவன கார்கள். அதில் கேய்ன் (Cayenne) என்கிற இந்த மாடல் எஸ்யூவி - கூபே என இரண்டு மாடல்களாக விற்பனையில் இருக்கிறது. இந்தக் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.9 கோடி ரூபாயில் இருந்து 2.5 கோடி வரை வருகிறது. இந்த 3-வது ஜெனரேஷன் காரில் அப்படி என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்!
பாலகிருஷ்ணா, தமனுக்குக் கொடுத்த காரின் கலர் - Quartz Grey Metallic shade. ஏற்கெனவே கூபே மாடல் விற்பனையில் இருந்த நிலையில், 2023-ல்தான் இந்த கேய்ன் எஸ்யூவி லாஞ்ச் ஆனது. கூபேவுக்கும் எஸ்யூவிக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. சரிந்து விழும் கூரை இருந்தால் அது கூபே. சில கூபே கார்களில் காரின் மேற்கூரை திறக்கும்படி இருக்கும். இந்த 3-வது ஜென் எஸ்யூவியும் பார்ப்பதற்கு கூபே போலவேதான் இருக்கும்.

இதிலுள்ளது, 64,000 பிக்ஸல்கள் கொண்ட HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்ஸ். வெளிச்சும் சுமார் 500 - 600 மீட்டர்களுக்கு மேல் பீய்ச்சியடிக்கும். அதாவது, சுமார் அரைக் கிலோமீட்டர். இந்தக் காரில் 20 - 22 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாக வரும். நாம் விரும்பினால் 24 இன்ச் வீல்களும் ஆப்ஷனலாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் புது ஃபேஸ்லிஃப்ட்டில் பின் பக்க நம்பர் ப்ளேட், காரின் பம்பருக்குக் கீழே இருக்கும். பழைய மாடலில் டெயில்கேட்டில் பொருத்தியிருந்தார்கள். இதன் ரியர் செக்ஷன் கனெக்டட் எல்இடி டெயில் செக்ஷனில் கார் முழுதும் நீண்டு, பார்ப்பதற்கே செம ஸ்போர்ட்டியாக இருக்கும்.
பழசில் இருந்து இந்த கேபினை நன்றாக மாற்றியிருக்கிறது போர்ஷே. இந்தக் காரில் இருப்பது Taycan எனும் ஸ்போர்ட்ஸ் காரின் டிசைன். அதாவது, 3 ஸ்க்ரீன் செட்அப்புடன் இதன் சென்டர் கன்சோல் இருக்கும். அதாவது - டிரைவருக்கு 12.6 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நடுவே 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இடது பக்கம் கோ-டிரைவருக்கு ஒரு 10.9 இன்ச் டச் ஸ்க்ரீன். இந்த பேசஞ்ஜர் ஸ்க்ரீன் ஆப்ஷனலாக வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். இதன் ஸ்டீயரிங் வீல் டிசைனும் Taycan மாடலைப் போன்றே இருக்கிறது.
இந்தக் காரின் இன்ஜினைப் பொருத்தவரை இதில் இருப்பது 3.0 லிட்டர், அதாவது 3000 சிசி, டர்போ சார்ஜ்டு V6 பெட்ரோல் இன்ஜின். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இதில் உண்டு. இதன் பவர் 353hp மற்றும் 500Nm டார்க். 6 விநாடிகளில் 100 கிமீ-யைத் தொடும் இந்த கேய்ன்.
இதுவே GTS எனும் மாடலின் பவர் 500hp. இது 4.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தில் பறந்துவிடும். இதன் டாப் ஸ்பீடு 275 கிமீ. எஸ்யூவியாக இருந்தாலும், இது பெர்ஃபாமன்ஸுக்கும் ஹேண்ட்லிங்குக்கும் பெயர் பெற்ற கார். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லம்போகினி உருஸ் (Lamborghini Urus) கார் தயாராகும் அதே MLB EVo என்கிற ப்ளாட்ஃபார்மில்தான் இது ரெடியாகிறது.
இதன் முக்கியமான ஹைலைட் என்னவென்றால், இதிலுள்ள PASM (Porsche Active Suspension Management System) மற்றும் AAS (Adaptive Air Suspension). இது ஓர் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் டேம்ப்பிங் சிஸ்டம். அதாவது - சாலை அமைப்புக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் செட்அப்பை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஆஃப்ரோடில் ஜம்மென்று சாஃப்ட் ஆகவும், ஹைவேஸில் கிண்ணென்று ஸ்டிஃப் ஆகவும் மாற்றிக் கொண்டு பறக்கலாம். மேடுகள் ஸ்பீடு பிரேக்கர்கள் வந்தால், அப்படியே காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை ஏற்றிக் கொள்ளலாம். இதிலுள்ள ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் இதன் டாப் ஸ்பீடு 248 கிமீ. இதில் ரியர் ஆக்ஸிலுக்கும் ஸ்டீயரிங் உண்டு என்பது இன்னொரு ஸ்பெஷல். போர்ஷே, இந்தக் காரில் எலெக்ட்ரிக் ஹைபிரிட் வெர்ஷனையும் விற்பனைக்கு விட்டிருக்கிறது.
அடுத்த ‛அகாந்தா 2’ படம் ஹிட்டானால், மஸராட்டி Levante கார் வாங்கிக் கொடுங்க பாலய்யா!