செய்திகள் :

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

post image
பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.

'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத்தில் கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில், நடிகை பிரீத்தி ஜிந்தாவைக் குறிப்பிட்டு, "அவர் தனது சமூக ஊடகக் கணக்குகளைப் பா.ஜ.க-வுக்குக் கொடுத்து, தனது 8 கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இதனால் கடந்த வாரம் அந்த வங்கி சரிவைச் சந்தித்துள்ளது. அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு தெருக்களில் இறங்கியுள்ளனர்" என்று பதிவிடப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்திக் காணொலிகளும் அந்தப் பதிவில் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து மெளனம் கலைத்து மனம் திறந்திருக்கும் நடிகை பிரீத்தி ஜிந்தா, "என் சமூக வலைத்தளக் கணக்கை நான் தான் கையாளுகிறேன். வதந்திகளை, போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள். நான் எந்தக் கடனும் வாங்கவில்லை. என் கடன் தள்ளுபடி செய்யப்படவுமில்லை.

இதுபோன்ற வதந்திகளை அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து பரப்பி, அதுவும் என் பெயர், புகைப்படங்களோடு, போலியான செய்தியைப் பகிர்வது அதிர்ச்சியளிக்கிறது. நான் என் கடனை 10 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பிச் செலுத்திவிட்டேன். இப்போது எனக்கு எந்தக் கடனுமில்லை. இனி இதுபோன்ற வதந்திகள், சந்தேகங்கள் இருக்காது. போதுமான விளக்கம் தந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "சில பத்திரிகையாளர்கள் உண்மையைக் கண்டறியாமலே செய்தியை வெளியிடுவது என்ன மாதிரியான பத்திரிகை ஒழுக்கம்? சந்தேகமிருந்தால், என்னிடமே தொடர்பு கொண்டு, என் தரப்பையும் கேட்டறியலாம். அதைவிட்டுவிட்டு வதந்திகளை, போலியான செய்தியை வெளியிடுவது தவறான விஷயம். இதற்கான நீதி கேட்டு, நான் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டுமா?

நீங்கள் என்னை மதித்தால், நானும் உங்களை மதிப்பேன். பல ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படாதீர்கள்" என்று காட்டமாகத் தனது விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Odisha: ``தரமற்ற உணவு, அவமரியாதை..'' - ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!

அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி.... மேலும் பார்க்க

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? - ரேகா குப்தா விளக்கம்!

டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்... மேலும் பார்க்க

America: `இப்படி நடக்கும்னு நினைக்கல' - ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே.அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், 'இன... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும்தான் நடைபெறுகிறது..." - சி.வி.சண்முகம் காட்டம்

திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை என்றும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிக்கின்றன... மேலும் பார்க்க

Railway: முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? - ரயில்வே விளக்கம்!

கும்பமேளா நிகழ்வைத் தொடர்ந்து, டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில், 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்திய ரயில்வே துறை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கடுத்து, தெற்கு ரயில்வேயில் 13... மேலும் பார்க்க

பிரதமரின் முதன்மைச் செயலாளராக RBI முன்னாள் கவர்னர் நியமனம்! - யாரிந்த சக்திகாந்த தாஸ்?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிரதமரின் பதவ... மேலும் பார்க்க