மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: தாக்கியவரின் தாய் மருத்துவர் மீது போல...
Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்
வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி, அரியலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.