செய்திகள் :

Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

post image

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது.

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை
கனமழை

இந்த நிலையில், கனமழை காரணமாக மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறை:

தஞ்சாவூர்

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

கடலூர்

செங்கல்பட்டு

திருவள்ளூர்

திருவாரூர்

மயிலாடுதுறை

ராணிப்பேட்டை

பள்ளிகளுக்கு மட்டும்:

சென்னை

இவை மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

Rain Alert: `இரவில் கொட்டித் தீர்க்கும் கனமழை; கலக்கத்தில் மக்கள்' - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தண்டவாளத்தில் மண்சரிவு தொடர் மழையின் காரணமாக ... மேலும் பார்க்க

Rain Updates: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு Red Alert; வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு என்ன?

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது சில மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப... மேலும் பார்க்க

Rain Update: எந்தெந்த மாவட்டங்களில் 24-ம் தேதி வரை மழை; முழு விவரம்

தற்போது இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, 'தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது'. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 24-ம் தேதி வரையில் இடியுடன் க... மேலும் பார்க்க

Rain Updates: 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்

கடந்த சில நாள்களாகவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்று காலை 10 மணி வரை... சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நா... மேலும் பார்க்க

Rain Alert: ``இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' - சென்னை வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க