செய்திகள் :

Rain Alert: தமிழ்நாட்டில் செப். 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

post image

தமிழ்நாட்டில் வருகிற செவ்வாய்கிழமை (செப் 23) வரை, மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி,

இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர். இராணிப்பேட்டை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 மழை
மழை

நாளை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 20, 21, 2025 தேதிகளில் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 22, 2025 தேதியில் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 23, 2025 தேதியில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, திருப்பத்த... மேலும் பார்க்க

Chennai Rain: இரவு முழுவதும் இடி, மின்னல்; "அடுத்த மூன்று நாட்களுக்கு" - பிரதீப் ஜான் அப்டேட்!

நேற்று இரவு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகள... மேலும் பார்க்க

``கனிம வளக்கொள்ளை; மக்களின் தலையீட்டை முடக்கும் உத்தரவு'' - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சொல்வதென்ன?

கனிம வளம்:இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்... மேலும் பார்க்க

Rain: ``தமிழகம், புதுச்சேரியில் 12 வரை மழை தொடரும்'' - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக செங்கல்பட்டு... மேலும் பார்க்க

Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31), ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதி ஆகும்.இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் உள்ளூ... மேலும் பார்க்க

Rain Alert: "செப்டம்பரில் இங்கெல்லாம் அதிக மழை பெய்யும்" - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?

தெற்கில் மழை, மேற்கில் வெள்ளம் என்று ஏற்கெனவே இந்தியாவில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.இந்த செப்டம்பர் மாதம் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது."20... மேலும் பார்க்க