செய்திகள் :

Rain Alert: நாளை கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்?

post image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது, தென் மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள கணிப்பின் படி,

நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் கன மழையில் இருந்து அதிக கன மழை வரை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதிக கன மழையில் இருந்து கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'

வரும் வியாழ கிழமை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

Rain Alert: சென்னைக்கு கன மழை எச்சரிக்கை... 3 நாள்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி,நாளை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அ... மேலும் பார்க்க

கனமழை: குற்றாலம் பேரருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 வயது குட்டி யானை பலி!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகி இருக்க... மேலும் பார்க்க

Rain Alert: `காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையலாம்' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னர், 'நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். ஆனால், அது வலுவடையாமல் காற்று அழுத்த தாழ்வுப் பகுதியாகவே நகரும்" என்று கூறியிருந்தது. ஆனால், தற்போதைய அப்டேட... மேலும் பார்க்க

Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவி வருகிறது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு குறைந்து மேற்கு-வ... மேலும் பார்க்க

Rain Alert : கனமழை எதிரொலி... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை?!

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ... மேலும் பார்க்க

Heavy Rain: தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளம் | Video & Photos

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.! திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் நெல்லை டவுன்-மேலப்பாளையம் இணைக்கும் கருப்பந்துறை ஆற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கிய... மேலும் பார்க்க