Sachin: ``உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!" - டெண்டுல்கர் ஷேர் செய்த சிறும...
Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் `வலுப்பெறும்'... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில், வானிலை மைய அறிக்கையின் படி, வரும் டிசம்பர் 22-ம் தேதி, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.
"இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம்" என்று சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிக்கை கூறுகிறது.