பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.
அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் புயலுக்கு 'சக்தி' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் மழை பெய்யும்.
சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி,

இன்று காலை 10 மணி வரை...
திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
ஏற்கெனவே, இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 4, 2025