செய்திகள் :

Rain Updates: 'இந்த வாரம் முழுதும் மழை' - வடகிழக்கு பருவமழை தீவிரம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு Alert?

post image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக மாறவுள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால்தான், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்து வருகிறதாம்.

 மழை
மழை

நாளை

நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள்

நாளை மறுநாள் (அக்டோபர் 24) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என சென்னை வானிலை மையம்‌ கணித்துள்ளது.

Rain Updates: வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 26 ஆம் தேதி ஆழ்ந்தக் காற்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர் திறப்பு; காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக உபரிநீராக வ... மேலும் பார்க்க

Rain Updates: வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - புயலாக வலுபெறுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, வேலூர், திருப்பத்த... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வ... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் க... மேலும் பார்க்க