Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்
தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி விடுமுறை:
தஞ்சாவூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருவாரூர்
மயிலாடுதுறை
ராணிப்பேட்டை
பள்ளிகளுக்கு மட்டும்:
சென்னை
இவை மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.